twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ஆண்டனிக்கு ஹேட்ஸ் ஆஃப்.. ஹரிஷ் கல்யாணும் அதை கடைபிடிக்கப் போறாராம்.. மற்றவர்கள் எப்படி?

    |

    சென்னை: தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட விஜய் ஆண்டனிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    மிகச்சிறந்த முடிவு.. மனம் திறந்து பாராட்டுகிறேன்.. விஜய் ஆண்டனிக்கு மனோபாலா நன்றி!

    லாக்டவுனால் மற்ற சினிமா துறைகளை போலவே கோலிவுட்டும் முடங்கிப் போய் நிற்கிறது.

    இந்நிலையில், அதிக சம்பளம் வாங்கும் சினிமா பிரபலங்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர்கள் சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா.. மம்முட்டிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன மோகன் லால்!திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா.. மம்முட்டிக்கு அசத்தலாய் வாழ்த்து சொன்ன மோகன் லால்!

    25 சதவீதம் குறைப்பு

    25 சதவீதம் குறைப்பு

    தயாரிப்பாளர்களின் துயரை உணர்ந்து, முதல் ஆளாய் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைத் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    தயாரிப்பாளர்கள் பாராட்டு

    தயாரிப்பாளர்கள் பாராட்டு

    விஜய் ஆண்டனியின் இந்த முடிவை மனோபாலா உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களும் மனம் விட்டு பாராட்டினார்கள். கோலிவுட் சினிமாவை இந்த லாக்டவுனுக்கு பிறகு நடிகர்களும், நடிகைகளும் தான் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஹேட்ஸ் ஆஃப்

    ஹேட்ஸ் ஆஃப்

    தயாரிப்பாளர்களை தொடர்ந்து தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு "ஹேட்ஸ் ஆஃப்" என பாராட்டியுள்ளார். ஊரடங்கு முடிந்த உடன் சினிமா துறையில் பல மாற்றங்களை செய்தாக வேண்டிய நிலை வரும் என்றும், தனது பங்கும் அதில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

    சம்பளக் குறைப்பு

    சம்பளக் குறைப்பு

    விஜய் ஆண்டனியை தொடர்ந்து தனது சம்பளத்தையும் குறைக்க நடிகர் ஹரிஷ் கல்யாண் முன்வந்துள்ளதாக அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெர்ஷன் 2.0வாக மாறியுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான தாராள பிரபு படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்தது.

    கசட தபற

    கசட தபற

    தாராள பிரபு படத்தைத் தொடர்ந்து நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் கசட தபற படத்திலும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தனது புது ஹேர்ஸ்டைல் லுக்கை வெளியிட்டு வைரலாக்கி இருந்தார் ஹரிஷ் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்ற நடிகர்கள்

    மற்ற நடிகர்கள்

    கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இன்னும் இந்த பூனைக்கு மணி கட்ட முன்வந்ததாக தெரியவில்லை. 30 கோடிக்கு மேல் சம்பளத்தை வாங்கும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பலரும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு சம்பளத்தை குறைப்பார்களா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

    English summary
    After Lockdown Cinema stars willingly come to cut their salary’s to save producers. After Vijay Antony cuts his salary by 25 percentage now Harish Kalyan joins his path.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X