மேமேமே... பர்ஸ்ட்டு விஷால்.. அப்போ அடுத்த ‘ஆடு’ ஆர்யாவா?
விஷால் திருமண அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்யாவும் விரைவில் தனது திருமணம் பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : விஷாலை தொடர்ந்து நடிகர் ஆர்யாவும் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த விஷயம் நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய செய்தி தான். ஆந்திர பெண் ஒருவரை விஷால் காதலிப்பதாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த அனிஷா ரெட்டியுடன் விஷால் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த புகைப்படங்கள் வைரலாக பரவின.

விஷாலுக்கு வாழ்த்து:
இதையடுத்து, அனிஷா தான் தனது விருங்கால மனைவி என்பதை விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஷாலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்யா ஆடு:
இந்நிலையில் விஷாலின் நண்பர் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்தை டேக் செய்து ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், 'முதல் ஆடு (எமோஜி) விஷால், அடுத்த ஆடு (எமோஜி) ஆர்யா தானே. என்ன விக்ராந்த் நான் சொல்வது சரி தானே", என கேள்வி எழுப்பி இருந்தார்.
விரைவில்:
இதற்கு பதில் அளித்த விக்ராந்த், "ஹாஹாஹா சரி தான். மிக விரைவில் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதே போல் ஆர்யா ரசிகர்கள் பலரும் அவரது திருமண அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை :
ஏற்கனவே தமிழ் சினிமாவில் ப்ளே பாய் என செல்லமாக அழைக்கப்படும் ஆர்யா, அவருடன் நடித்த பெரும்பாலான நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல்வேறு சுற்றுகளுக்குப் பின் இறுதியில் யாரையும் தேர்வு செய்யாமல் ஜகா வாங்கினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
தற்போது அவர், நடிகை சாயிஷாவைக் காதலித்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இந்தத் தகவலை அவர்கள் இருவருமே மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விரைவில் அவர்களது திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











