முதலில் விஷால், இப்போ ஆர்யா: அடுத்தடுத்து நடிகைகளை திருமணம் செய்யும் நண்பேன்டாக்கள்
Recommended Video

சென்னை: விஷாலை அடுத்து அவரின் நண்பர் ஆர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் விஷால், ஆர்யா ஆகியோருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறதே திருமணம் எப்பொழுது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.
இதையடுத்து ஆர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா
விஷால் தான் முன்பே தெரிவித்தது போன்று நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து அதில் தான் திருமணம் செய்கிறார். விஷாலுக்கு பெண் கிடைத்தாச்சு அடுத்து ஆர்யா தான் என்று அவரின் நண்பர்கள் கலாய்த்தனர். இந்நிலையில் ஆர்யாவுக்கும் பெண் கிடைத்துவிட்டது.

சயீஷா
ஆர்யாவும், நடிகை சயீஷாவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ஆனால் இது குறித்து இருவருமே அமைதியாக உள்ளனர். இந்நிலையில் ஆர்யா, சயீஷாவின் திருமணம் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அதையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நடக்கிறது.

எங்க வீட்டு மாப்பிள்ளை
ஆர்யாவுக்கு பெண் தேடத் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் எந்த பெண்ணையும் தேர்வு செய்யவில்லை அவர். இந்நிலையில் அவர் சயீஷாவை தேர்வு செய்து திருமணம் செய்கிறார்.

ரசிகர்கள்
ஆர்யா, சயீஷா திருமணம் செய்து கொள்ளப் போவது குறித்து அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா இப்படி திடீர் என்று செட்டில் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications











