மனசுல ரன்வீர் சிங்கின்னு நினைப்பா?...நிர்வாண போட்டோவை பகிர்ந்த சின்னத்திரை பிரபலம்
சென்னை : விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சரத்.சின்னத்திரை மொட்டை ராஜேந்திரன் என அன்போடு அழைக்கப்படும் சரத், விஜய் டிவி ஷோக்களில் தீனாவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லை இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அவர் நடித்திருக்கிறார்.
விஜய் டிவியில் டி.ஆர்.பி மிஷினான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டார். இதுப்போல் சரத் இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் டைட்டில் கார்டை வென்றது இல்லை.

ஆனால் முதன்முறையாக காதல் மனைவியின் துணையுடன் மிஸ்டர் அன்ட் மிஸ்சர்ஸ் சின்னத்திரை சீசன் 3ல் டைட்டிலை அடித்ததுடன் சரத் - கிருத்திகா ஜோடி 5 லட்சம் ரொக்கத்தையும் சொந்தமாக்கினார்கள்.டிவி தொகுப்பாளர், காமெடியன், நடிகர் என பல திறமைகளைக் கொண்ட சரத் சின்னத்திரை ரசிகர்களிடம் மிக பிரபலம்.
தற்போது சின்னத்திரை சீரியலிலும் சரத் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிம்புவின் சூப்பர் ஹிட் மாநாடு படத்திலும் சரத் முகம் காட்டியுள்ளார்.முறைப்படி கிளாகிக்கல் நடனம் கற்றவர். இதுவரை பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் சரத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர். இந்த சமயத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோ அனைவரையும் ஷாக்காகி உள்ளது. படுக்கையில் நிர்வாணமாக படுத்திக்கும் பிளாக் அன்ட் ஒயிட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

முதலில் இதை பார்த்த பலரும் உடம்பு சரியில்லாமல் உள்ளார் என நினைத்து, விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என வாழ்த்தி கமெண்ட் செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே போட்டோவை நன்கு கவனித்து பார்த்த பலர், என்ன நீங்களும் டிரெண்டிங் லிஸ்டில் சேர்ந்துட்டீங்களா. மனசுல பெரிய ரன்வீர் சிங்குன்னு நினைப்பா? விஷ்ணு விஷாலை தொடர்ந்து நீங்களும் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளீர்களே.
நீங்களும் சரத்...இப்படியெல்லாம் பண்ணினா பிரபலம் ஆக முடியாது. வழக்கு தான் பாயும் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அதிகமானர்கள் நீங்களும் என்று அதிர்ச்சியான கமெண்ட்டை தான் பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்றால், கோலிவுட்டில் விஷ்ணு விஷால் செய்தார். இப்போது சின்னத்திரையிலும் நீங்க ஆரம்பிச்சு வச்சுடீங்களா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











