கலக்கல் காமெடிக்கு தயாராகும் ரசிகர்கள்... ஏப்ரலில் கொரோனா குமார் சூட்டிங்கில் இணையும் சிம்பு
சென்னை : மாநாடு படம் கொடுத்த வெற்றியின் சந்தோஷத்தில் அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் சிம்பு.
Recommended Video
கலைத்துறையில் இவர் மேற்கொண்ட சாதனைக்காக இவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் டாக்டர் பட்டத்தை அளிக்கவுள்ளது.
தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்கில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஈஸ்வரன் படம் வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்து வெளியான மாநாடு படம் சூப்பர் டூப்பர் வெற்றியாக அமைந்தது. டைம் லூப் பாணியில் வெளியான இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

மாநாடு படம்
மன்மதன் படத்திற்கு பிறகு இந்த சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார் சிம்பு. 100 கோடி கிளப்பில் இணைந்த அவரது முதல் படம் என்ற பெருமையும் மாநாடு படத்திற்கு கிடைத்துள்ளது. இதையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார் சிம்பு. உடல் எடையை கணிசமாக குறைத்து படங்களில் முழு கவனத்தை செலுத்திவரும் அவருக்கு தொடர் வெற்றிகள் சாத்தியப்பட்டு வருகிறது.

வெந்து தணிந்தது காடு படம்
இந்நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் உடல் எடையை குறைத்து வித்தியாசமான கோணத்தில் அவர் காட்சி அளிக்கிறார். எப்போதும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் கௌதம் மேனன் இந்தப் படத்தில் வேறு கதைகளத்தை கையில் எடுத்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக்கிக் கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தையடுத்து பத்து தல படத்தின் எஞ்சிய சூட்டிங்கை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

கொரோனா குமார் சூட்டிங்
தொடர்ந்து கொரோனா குமார் படத்தின் சூட்டிங்கில் வரும் ஏப்ரல் மாதத்தில் அவர் இணையவுள்ளார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படம் போலவே இந்தப் படத்தையும் காமெடி கலாட்டாவாக இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











