Cool Suresh on Keerthy Shetty - கோவப்பழம் உதடு நாவல் பழ கண்ணு - கீர்த்தி ஷெட்டியை வர்ணித்த கூல் சுரேஷ்
சென்னை: Cool Suresh on Keerthy Shetty (கீர்த்தி ஷெட்டி குறித்து கூல் சுரேஷ்) கஸ்டடி படத்தை பார்த்துவிட்டு நடிகர் கூல் சுரேஷ் நடிகை கீர்த்தி ஷெட்டியை ஏகத்தும் வர்ணித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு மாநாடு படத்துக்கு பிறகு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கீர்த்தி ஷெட்டி, ப்ரியாமணி, சரத்குமார், ராம்கி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். நாக சைதன்யாவுக்கு தமிழில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்டடி ரிலீஸ்: மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நயாட்டு படத்தின் இன்ஸ்பிரேஷனால்தான் இந்தப் படத்தை எடுத்தேன் என வெங்கட் பிரபு ஏற்கனவே அறிவித்திருந்ததால் ரசிகர்களும் ஆவலோடு படம் பார்க்க சென்றனர். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
வசூல் எவ்வளவு?: மாநாடு படம் நூறு கோடி ரூபாய் வசூலித்திருந்த சூழலில் கஸ்டடி படத்தின் முதல் நாள் வசூல் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படமானது,முதல் நாளில் மூன்று கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்,இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரித்துவிடும் என கஸ்டடி படக்குழு நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் படத்துக்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் அதிகம் தென்படுவதால் ஒருவித அச்சத்திலும் படக்குழு இருக்கிறது.
காக்கி சட்டையில் கூல் சுரேஷ்: இந்நிலையில் ஒரு படம் விடாமல் ப்ரோமோஷன் செய்யும் கூல் சுரேஷ் கஸ்டடி படத்தை பார்ப்பதற்கும் வித்தியாசமான முறையில் வந்தார். காவல் துறை உடை அணிந்து கையில் விலங்கு மாட்டிக்கொண்டு கமலா திரையரங்கில் படத்தை பார்த்தார் கூல் சுரேஷ். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஸ்டடி வெங்கட் பிரபு சாரின் பெஸ்டடி. வசனங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன.

இன்னும் அப்படியே இருக்கிறார்: சரத்குமார் இன்னும் அப்படியே இருக்கிறார். ராம்கியும் சூப்பராக இருக்கிறார். ஜீவா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் எந்த் புரோமோஷனுக்கும் வரவில்லை. அரவிந்த் சாமியின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. அவருக்கென்றே வசனங்களை தனியாக எழுதியிருக்கிறார்கள் போல. அவர அந்த வசனத்தை பேசும் முறையும் சூப்பராக இருக்கிறது. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கான். நாக சைதன்யா தம்பி நடிப்பில் அட்டகாசம் செய்திருக்கிறார்.
கோவப்பழ உதடு; நாவல் பழ கண்ணு: நடிகை கீர்த்தி ஷெட்டி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். எல்லோரும் பெண்களை வேறு எங்கு எங்கோ பார்ப்பார்கள். ஆனால் நான் கண்களையும், உதடுகளையும்தான் பார்ப்பேன். ஏனென்றால் அவர்கள் கண்களில் ஒரு உண்ம இருக்கும். அவர்களது உதடுகள் உண்மையை மட்டும்தான் பேசும். கீர்த்தி ஷெட்டியின் உதடுகள் கோவப்பழம் போல் இருக்கிறது. அவரது கண்கள் நாவல் பழம் போல் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











