For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  படம் பார்த்ததும் எனக்கு வந்த மெசேஜை பார்த்து நெஞ்சே அடைச்சிடுச்சு...கார்த்தி எந்தப் படத்தை சொல்றார்?

  |

  சென்னை: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் சர்தார்

  நேற்று இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இணையத்தில் வெளியான டிரைலரும் பிரபலமானது.

  அதில் பேசிய நடிகர் கார்த்தி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

  விக்னேஷ் சிவனை தொடர்ந்து இன்னொரு இயக்குநரும் அப்பாவானார்.. சந்தோஷத்தில் தர்மபிரபு இயக்குநர்! விக்னேஷ் சிவனை தொடர்ந்து இன்னொரு இயக்குநரும் அப்பாவானார்.. சந்தோஷத்தில் தர்மபிரபு இயக்குநர்!

  சிப்பாய் ஆன நடிகன்

  சிப்பாய் ஆன நடிகன்

  1980-களில் இந்திய அரசு ரகசிய உளவாளிகளை தயார் செய்து உளவு பார்க்க மற்ற நாடுகளுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்தார்களாம். அப்போது இராணுவத்தில் இருந்த நபர்களுக்கு நடிப்பதற்கு பயிற்சி கொடுக்க, யாருமே சரியாக நடிக்கவில்லையாம். அப்போது ஒரு இராணுவ வீரனை நடிகனாக்குவதை விட ஒரு நடிகனை பிடித்து இராணுவ வீரன் ஆக்கிவிடுவோம் என்று ஒரு நாடக நடிகனை சிப்பாயாக மாற்றி அவரை பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஒரு தகவலை இயக்குநர் மித்ரன் என்னிடம் கூறினார். அது என்னை பிரம்மிப்படைய செய்தது. உடனே அதனை கதையாக தயார் செய்யுங்கள் என்று கூறினாராம்.

  இரட்டை வேடங்கள்

  இரட்டை வேடங்கள்

  கதையை எழுத ஆரம்பித்தவர், சிறிது நாட்கள் கழித்து இரட்டை வேடங்களாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் இரட்டை வேடமா வேண்டாமென்று நான் கூறினேன். அப்போது கதை அதனை எதிர்பார்க்கிறது என்று மித்ரன் என்னை ஒப்புக் கொள்ள வைத்தார். ஒரு கதாபாத்திரம் வயதான நபர். அதனால் 40, 50 வயதுக்கு மேலே உள்ள நபர்களின் உடல் மொழியை ஆராய்ந்து நடிக்க வேண்டியதாக இருந்தது. இந்தியாவிற்காக உயிரையே கொடுக்கத் துணியும். ஆனால் தான் யார் என்ற அடையாளத்தை ரகசியமாகவே வைத்து உளவாளியாக செயல்படும்.

  மீண்டும் போலீஸ்

  மீண்டும் போலீஸ்

  இன்னொரு பக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம். சின்ன விஷயம் செய்தால் கூட அதை நாற்பதாயிரம் பேருக்கு தம்பட்டம் அடித்து கூறுவது போன்ற கதாபாத்திரம். தீரன், சிறுத்தை இந்த இரண்டு படங்களிலும் இருந்து வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு நடித்திருக்கிறேன். இது இந்திய சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்லலாம். ஆனால் நீச்சல் உடை காட்சிகளோ, சிக்ஸ் பேக் உடல் அமைப்போ இல்லாத ஒரு இந்திய உளவாளி திரைப்படம்.

  நெஞ்சு அடைத்தது

  நெஞ்சு அடைத்தது

  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் முதன் முதலில் இயக்கியிருந்த இரும்புத்திரை திரைப்படத்தை பார்த்த பின்னர் எனக்கு மொபைலில் ஒரு மெசேஜ் வந்தது. அதனை பார்த்த பிறகு எனது நெஞ்சே அடைத்து என்னை உலுக்கியது போல் இருந்தது. நம்மை சுற்றி நாம் சாதாரணமாக கடந்து போகும் ஒரு சிறிய விஷயத்தில் இவ்வளவு பெரிய பேராபத்து இருக்கிறதா என்று அந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. அதனை கதையாக தேர்வு செய்து தனது முதல் படமாக கொடுத்த மித்ரனை பாராட்டுகிறேன். தமிழ் மட்டுமின்றி இந்தி டப்பிங்கில் 200 மில்லியன்கள் பார்வையாளர்களை தாண்டி அந்தப் படம் வெற்றிகரமாக பார்க்கப்படுகிறது என்று கார்த்தி பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

  English summary
  Sardar is a movie starring actor Karthi directed by PS Mithran. The trailer launch of this movie was held yesterday. The trailer released on the internet is also popular. During the trailer Launch Event, actor Karthi shared many interesting information about PS Mithran and his movies.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X