நல்லா கேளுங்க சார்... ப்ரோமோ பார்த்து அபிஷேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 20 நாளாம் இன்று கமல் வரும் வார இறுதி எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதுவரை மூன்று ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு, இவைகள் வைரலாகி உள்ளன.

நடந்து முடிந்த வாரத்தில், பிக்பாஸ் வீட்டில் பஞ்ச பூதங்களின் பெயர்களைக் கொண்ட 5 நாணயங்கள் வைக்கப்பட்டன. இந்த நாணயங்களை யாருக்கும் தெரியாமல் கைப்பற்றுபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்தார். அதிக நாணயங்களை வைத்திருப்பவர்கள் நாமினேஷனில் இருந்து தன்னை அல்லது தனக்கு பிடித்தமான நபர்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

After watching today promo Netizens trolls Abishek

இந்த வாரம் 9 பேர் நாமினேட் ஆகி உள்ள நிலையில், நாணயங்களை கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பவரை வைத்து வீட்டில் உள்ள அனைவரையும் தூக்க வேண்டும் என பிரியங்கா, அபிஷேக் ஆகியோர் பேசிக் கொண்டனர். அபிஷேக் இதற்காக பல குழப்பங்களை செய்தார். இது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது.

ஏற்கனவே ப்ரோமோ அனைத்திலும் அபிஷேக் தான் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். அபிஷேக்கிற்கு இதனால் எதிர்ப்பு வலுத்தது. ஆரம்பத்தில் ஃபன் பண்ணிக் கொண்டிருந்த பிரியங்காவும் தற்போது மொத்தமாக மாறி விட்டார். இவர்களை வீட்டை விட்டு வேளியேற்றுங்கள் என பலர் சோஷியல் மீடியாக்களில் குரல் கொடுக்க துவங்கினர்.

நாணயங்களை கைப்பற்றும் லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் பிரியங்கா குரூப் செய்த வேலைகளை கேள்வி கேட்க போவதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல் மறைமுகமாக தெரிவித்தார். ஆனால் இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்காவையும், மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக்கையும் மடக்கி, மடக்கி கேள்வி கேட்டு தெரிவிக்க விட்டார் கமல். இவற்றை பார்த்து கமலை பாராட்டியதுடன், பிரியங்கா குரூப்பை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நீங்க நிஜமாவே பிக்பாஸ் பார்த்தது இல்லையா. அப்புறம் எப்படி நிகழ்ச்சியில் கடைசியில் நடக்கும் டாப் 5 லிஸ்ட் பற்றி விரிவாக பேசுகிறீர்கள் என கேட்டார் கமல். இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, நல்லா கேளுங்க சார். மாட்டுனியா. அபிஷேக்கை முதலில் வெளிய அனுப்புங்கள் என பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். என்கிட்டயே உருட்டுறியே என கமல் மைண்ட் வாய்ஸ் இருக்கும் என்று வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் பேர், பிரியங்கா தயவுசெய்து வெளிய வந்திருங்க. உங்கள எங்களால இப்படி பார்க்க முடியல. இப்போ பிரியங்கா நினைப்பார்...வச்சான் பாரு ஆப்பு எனக்கு என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர். பிரியங்காவுக்கு செம நோஸ்கட். அப்படி போடு...வேற லெவல் கமல் சார் என கமலை பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X