twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை படம் பார்த்த தமிழ்நாடு சிஎம்...வினோத்திடம் விசாரிக்க உத்தரவு...எதுக்குன்னு தெரியுமா?

    |

    சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அஜித் நடித்த வலிமை படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு டைரக்டர் ஹெச்.வினோத்திடம் விசாரணை நடத்த தன்னுடைய தனி டீமுக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டைரக்டர் வினோத்திடம் விசாரிக்கணும் என்ற தகவலை முதலில் பார்த்ததும் ஷாக்கானவர், பிறகு எதற்காக என்று தெரிந்ததும் வினோத்திற்கு பாராட்டு குவிந்து வருகிறதாம். முதலமைச்சரும் வலிமை படத்தை பார்த்துள்ளார் என்பதை தாண்டி, இந்த படம் அவரின் மனதில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதே என அஜித் ரசிகர்கள் பூரித்து போய் உள்ளனர்.

    அஜித்தின் வலிமை படம் பிளாப்...சூசகமாக பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்.அஜித்தின் வலிமை படம் பிளாப்...சூசகமாக பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்.

    வலிமையின் வசூல் சாதனை

    வலிமையின் வசூல் சாதனை

    டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசான படம் வலிமை. இந்த ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த, கொண்டாடிய படமாக மட்டுமின்றி, முந்தைய பல படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனையை முறியடித்தது. ரிலீசான முதல் வாரத்திலேயே 100 கோடி கிளப்பில் இணைந்தது வலிமை. சமீபத்தில் வலிமை படம் உலகம் முழுவதும் 200 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூரே அறிவித்தார்.

    ஓடிடியிலும் சாதனை

    ஓடிடியிலும் சாதனை

    தியேட்டரை தொடர்ந்து மார்ச் 25 ம் தேதி ஓடிடி தளத்திலும் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜீ 5 தளத்தில் வெளியிடப்பட்ட வலிமை, அதிலும் சாதனை படைத்தது. ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட 48 மணி நேரத்தில், அனைத்து மொழிகளிலும் 100 மில்லியன் Streaming Time ஐ கடந்து சாதனை படைத்துள்ளது. வலிமை படத்தின் அடுத்தடுத்த சாதனைகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உண்மை சம்பவ கதை

    உண்மை சம்பவ கதை

    சென்னையில் பைக் ரேஸ் கும்பலை சேர்ந்தவர்கள் நகை பறிப்பு, கொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவது, இவர்கள் வேலையில்லாத இளைஞர்கள், மனஅழுத்தத்தில் உள்ளவர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைப்பது போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு தான் வலிமை படத்தை இயக்கி உள்ளார் ஹெச்.வினோத். சமீபத்தில் வலிமை படத்திற்கு எதிராக கதை திருட்டு வழக்கு போடப்பட்ட போது கூட, இது செய்திதாள்களில் வந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த கதையை உருவாக்கியதாக கூறியிருந்தார் வினோத்.

    வலிமை படம் பார்த்த சிஎம்

    வலிமை படம் பார்த்த சிஎம்

    இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டீமிடம் சொல்லி டைரக்டர் வினோத்திடம் விசாரிக்க சொல்லி இருக்கிறார். எந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாக வைத்து இந்த கதையை வினோத் இயக்கினார். உண்மையிலேயே தமிழகத்தில் அப்படி ஏதாவது போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்ற விசாரணையை வினோத்திடம் இருந்தே துவக்க முதல்வர் முடிவு செய்திருக்கிறாராம்.

     வினோத்திடம் விசாரிக்க உத்தரவு

    வினோத்திடம் விசாரிக்க உத்தரவு

    சமீபத்தில் தான் தமிழகத்தில் கஞ்சா வேட்டை 2.0 என்ற ஆப்ரேஷனை துவக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 28 ம் தேதி துவங்கிய இந்த ஆப்ரேஷன், ஏப்ரல் 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல் போன்றவற்றை வேட்டையாட தான் இந்த ஆப்ரேஷன் துவங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வலிமை படம் வந்திருப்பதால் அதை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம். இந்த ஆப்ரேஷனில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.

    English summary
    After watching Valimai movie, Tamilnadu Chief Minister M.K.Stalin asked his team to enquire director H.Vinoth. The film inspired him to find out if such a drug network exists in tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X