பிக்பாஸ்.. பிக்பாஸ்.. பரோட்டா பிக்பாஸ்.. பிக்பாஸ்.. பிக்பாஸ்.. கலக்கி பிக்பாஸ்.. நல்லா கூவுறாங்க!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் முடித்து விட்டு, வின் பண்ண லக்சரி பட்ஜெட்டை ஷிவானி, ரமேஷ், ஆஜீத் டீம் கோட்டை விட்டுட்டாங்க.
அதனால், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு லக்சரி உணவுகளை கொடுக்க வேறு ஒரு பிளான் போட்டார் பிக் பாஸ்.
செஞ்சி முடி.. ஒரு பிடி பிடி என்கிற டாஸ்க்கில் கடைசியாக ஆண் போட்டியாளர்கள் மொத்தமாக போட்டி போட்டு ஜெயித்து பரோட்டாவுக்கும் கலக்கிக்கும் அலைந்தது செம காமெடி.

மீன் கிடைக்கல
அர்ச்சனா அக்கா கேமை சொதப்பலாக விளையாடி பாலை சரியான டம்ளரில் போடாமல் மீன் வறுவலை மிஸ் பண்ணிட்டார். அதனால், பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது கிடைக்காமல் போனது. அடுத்ததாக பாலா, ஃபலூடா ஜெயித்தார். அது அவருக்கே பத்தாது.

ஷிவானிக்கு வேணா
மிஞ்சி போனா அந்த ஃபலூடாவை ஷிவானிக்கு வேணா கொடுத்தா கொடுப்பார். மத்தபடி சுசித்ராவும், சனம் ஷெட்டியும் அதுக்கு பின்னாடி திரிந்தாலும் திரிவார்கள். இந்நிலையில், கடைசியாக பலூன் வைத்து ரயில் போல ஆண்கள் மட்டும் போட்டிப் போட்டனர். நல்ல வேளை!

அவுட்டான ஜித்தன் ரமேஷ்
ஜூஸ் பாட்டிலை சுழட்டிப் போட்டு சரியாக உட்கார வைக்க வேண்டும் என்கிற டாஸ்க்கை ஜித்தன் ரமேஷ் விளையாடினார். ஆனால், மற்ற போட்டியாளர்கள் விளையாடிய ஏகப்பட்ட டாஸ்க்குகளை அன்சீனிலே வைத்து விட்டனர். ஜித்தன் ரமேஷ் கடைசி வரைக்கும் முயன்றும் ஜெயிக்காமல் அவுட்டானார்.

பலூன் ரயில்
ஜித்தன் ரமேஷ், ஆரி, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, கேபி, ஆஜீத் என எல்லா போட்டியாளர்களும் சொதப்பிய பர்ஃபார்மன்ஸ்களை அன்சீனில் வைத்து விட்டனர். கடைசியாக, பலூன் ரயிலாக அனைத்து ஆண் போட்டியாளர்களும், பலூனை கீழே விழாமல் டைனிங் டேபிளை சுற்றி வந்து வெற்றிப் பெற்றார்கள்.

கலக்கி பிக் பாஸ்
இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாம் சோத்துக்கு செத்தவங்களா இருப்பாங்க போல, திங்கிறதுன்னா அப்படி அடிச்சிக்கிதுங்க என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். பலூன் ரயில் டாஸ்க்கில் ஜெயித்ததும், பிக் பாஸ் பிக் பாஸ் பரோட்டா பிக் பாஸ்.. பிக் பாஸ் பிக் பாஸ் கலக்கி பிக் பாஸ் என பாட்டுப் பாடி கெஞ்சி கேட்டது எல்லாம் காலக் கொடுமை.


Click it and Unblock the Notifications











