துணிவு படத்தோட சூட்டிங்கை முடிச்சாச்சு.. அடுத்தது என்ன பைக் டூர்தான்.. அஜித் போன பைக் டூர்!
சென்னை : நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
இதனிடையே ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் துணிவு.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினத்தை தொடர்ந்து தற்போது பாங்காக்கிலும் நடந்துள்ளது.

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. இந்நிலையில் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

துணிவு பட சூட்டிங்
முன்னதாக ஐதராபாத்தில் துணிவு படத்தின் சூட்டிங் மிகப்பெரிய செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு மற்றும் வங்கிக்கான செட்கள் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது.

பாங்காக்கில் சூட்டிங்
தொடர்ந்து விசாகப்பட்டினம் போன்ற இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. பூனாவில் திட்டமிடப்பட்ட படத்தின் சூட்டிங் பாங்காக்கிற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பாங்காக்கில் நடத்தப்பட்ட படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் முடிந்துள்ளது. இதையடுத்து படத்தின் முழுமையான படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.

பொங்கலுக்கு ரிலீஸ்
இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை படக்குழு துரிதப்படுத்தவுள்ளது. அடுத்ததாக படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில் 164 நாட்கள் கழித்து படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே இந்தப் படத்தின் இடையில் கிடைத்த இடைவெளிகளில் பிரிட்டன் மற்றும் இந்தியாவின் பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தாய்லாந்தில் பைக் டூர்
இவர் சர்வதேச அளவில் தன்னுடைய பைக் டூரை நடத்தி வரும் நிலையில், தற்போது பாங்காக் சூட்டிங் நிறைவையடுத்து தாய்லாந்தில் தனது பைக் டூரை மேற்கொண்டுள்ளார். தாய்லாந்தில் அஜித் தொடர்ந்து 6 நாட்கள் இந்த டூரை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படக்குழு நாடு திரும்பிய நிலையில், இந்த டூரை முடித்துக் கொண்டு அஜித் திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











