மத கஜ ராஜா ரிசல்ட்டை வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம் பெறுமா?.. ரிலீஸ் தேதி இதுவா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி படம் இன்றுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது. இதில் சத்யராஜ், ஜெயராம், ஜெய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கிறார். எப்போதுதான் இப்படம் ரிலீஸாகும் என்ற கேள்வி பலரிடம் எழுந்த சூழலில்; தயாரிப்பாளர் சிவா இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. அஜித், விஜய், சூர்யா ஆகிய டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கும் அவர்; கடைசியாக கோட் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. அஜித்துக்கு ஒரு மங்காத்தாவை கொடுத்தது போல் இந்தப் படத்தையும் கொடுத்துவிடுவார் என்று எதிர்பார்த்த தளபதி ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

After Years of Delay Venkat Prabhu s Party to Release in February or March
Photo Credit:

சிவகார்த்திகேயனுடன் படம்: அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தில் கமிட்டாகிவிட்டார் அவர். ஆனால் அந்த சமயத்தில் விஜய்யின் கோட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததன் காரணமாக அதற்கு சென்றுவிட்டார். தற்போது எஸ்கேவுடனான படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அதேசமயம் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆகும் என்றும்; இதனால் தாய் கிழவி படத்தின் இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்படத்தில் நடிக்க சிவா முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபுவின் பார்ட்டி: இதற்கிடையே சத்யராஜ், ஜெயராம், ஜெய் உள்ளிட்டோரை வைத்து சில வருடங்களுக்கு முன்பு பார்ட்டி படத்தை இயக்கினார் வெங்கட். வழக்கான அவரது பட ஜானரில் படு ஜாலியாக இப்படம் உருவாகியிருந்தது. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்திருந்தார். பிரேம்ஜி அமரன் இசையமைத்திருந்தார். சூர்யா இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

ரிலீஸ் ஆகவில்லை: வெங்கட் பிரபுவின் ஜானரில் படம் உருவாகியிருந்ததால் பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றது. ஆனால் சில காரணங்களால் இன்னமும் ரிலீஸாகாமல் இருக்கிறது. ஒருகட்டத்தில் இனி இப்படம் அவ்வளவுதான் என்ற பேச்சும் எழுந்துவிட்டது. இந்நிலையில் பார்ட்டி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்போது ரிலீஸ்?: அவர் இதுகுறித்து கூறுகையில், "பார்ட்டி திரைப்படம் பிப்ரவர் இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் ரிலீஸாகிவிடும். அதற்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. மத கஜ ராஜா திரைப்படம் எப்படி தாமதமாக ரிலீஸாகி பெரிய வெற்றியை பெற்றதோ அதேபோன்று பார்ட்டி திரைப்படமும் வெற்றியடையும்" என நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார். மத கஜ ராஜா ரிசல்ட்டை பார்ட்டியும் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X