twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதுக்குத்தான் தளபதி விஜய் பத்தியே ட்வீட்டா? மாஸ்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்?

    |

    சென்னை: மாஸ்டர் படத்தின் வெளியீட்டு உரிமையை ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    யூடியூபில் மாஸ்டர் டீசர் செய்த மகத்தான சாதனை கொண்டாடும் விதமாக நேற்று யூடியூப் நடிகர் விஜயை கொண்டாடியது.

    அதனைத் தொடர்ந்து, மணிஹெய்ஸ்ட் வெப் தொடரின் அடுத்த அறிவிப்பையே நெட்பிளிக்ஸ் இந்தியா தளபதி விஜய்யின் பிகில் பட வசனத்தை வைத்து விளம்பரப்படுத்தி இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    இந்தியளவில் நடிகர் விஜய்யின் புகழ் மாஸ்டர் டீசருக்கு பிறகு உச்சத்துக்கு சென்றிருப்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

    பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் !பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் !

    M என்றால் மாஸ்டர்

    "The M in OMG stands for MASTERRRRRRR" என நேற்று யூடியூப் இந்தியா தொடர் ட்வீட்களையும், மாஸ்டர் டீசர் ரியாக்‌ஷன்களையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்கச் செய்தது. வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக தளபதி தான் மாஸ்டர் என்றும் யூடியூப் புகழ்ந்து தள்ளிவிட்டது.

    நெட்பிளிக்ஸும் சும்மா இல்லை

    யூடியூப் நேற்று தளபதி விஜய்யை அப்படி கொண்டாடிய நிலையில், நெட்பிளிக்ஸும் சும்மா விடக் கூடாது என்று, நெட்பிளிக்ஸ் இந்தியா நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் வசனத்தை மணி ஹெய்ஸ்ட் வெப் தொடருக்கான விளம்பரமாக பயன்படுத்தியது, விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

    கப் முக்கியம் பெர்லினே

    கப் முக்கியம் பெர்லினே

    ஹெய்ஸ்டிங்குனு எல்லாரும் பிசி! இதெல்லாம் யாரால புரொபஸர் ஆலயா? டோக்கியோவாலையா? பெர்லினேனேனே! என்றும் கப் முக்கியம் பெர்லினே என்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா போட்ட கேப்ஷனை பார்த்து, பாலிவுட், டோலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லாம் பொறாமையில் பொங்கி வழிகின்றனர்.

    விஜய் காசு கொடுத்துட்டாராம்

    சமூக வலைதளங்களில் தனது பெயரை டிரெண்ட் செய்ய நடிகர் விஜய் காசு கொடுத்து வேலை செய்வதாக ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், அதை வைத்தே தற்போது விஜய் ரசிகர்களே, உனக்கு ஒன்னு தெரியுமா நெட்பிளிக்ஸுக்கு விஜய் காசு கொடுத்துட்டாரம் என விஜய் ஹேட்டர்களை கலாய்த்து வருகின்றனர்.

    ஜஸ்ட் வாட்ச் இட்

    ஹேய்.. நெட்பிளிக்ஸ் என்னயா பிகில் வசனமெல்லாம் பேசுற என நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கும் விடாப்பிடியாய் ஜஸ்ட் வாட்ச் இட் என சர்கார் படத்தின் ஜிஃப் இமேஜை போட்டு அதிர விட்டுள்ளது நெட்பிளிக்ஸ் இந்தியா. புதுசா விஜய் ரசிகர் யாராச்சும் வேலைக்கு சேர்ந்துட்டானா? என்கிற கேள்விகளும் எழுந்து வருகிறது.

    நெட்பிளிக்ஸில் மாஸ்டர்

    நெட்பிளிக்ஸில் மாஸ்டர்

    தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. தியேட்டர் அதிபர்கள் ஒரு பக்கம் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, அட்லியின் அந்தகாரம் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ், நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தையும் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    Recommended Video

    Master Teaser Record Breaking • Trending in 9 Countries | Thalapathy Vijay
    என்ன காரணம்

    என்ன காரணம்

    நெட்பிளிக்ஸில் தமிழ் இயக்குநர்களான வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள பாவக் கதைகள் எனும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜிக்காகத் தான் இப்படி தமிழில் ட்வீட் போட்டு நெட்பிளிக்ஸ் அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    English summary
    Netflix India used actor Vijay’s Bigil dialogue for promoting world popular webseries Money Heist in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X