வெளியாகி ஒரு வாரம்தான் ஆகுது.. அதுக்குள்ள பொன்னியின் செல்வன் 2 பாடல் செய்த சம்பவத்தை பாருங்க

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் கடந்த 20ஆம் தேதி வெளியானது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. 60 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் இன்றைய தலைமுறையினரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம்

பொன்னியின் செல்வன் முதல் பாகம்

பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தாலும் அதை வாசிக்காதவர்களையும் வாசிக்கத்தூண்டியது பொன்னியின் செல்வன் திரைப்படம். மொத்தம் ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2

இதனையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் முதல் பாக வசூலை இரண்டாம் பாகத்தின் வசூல் முறியடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

பொன்னியின் செல்வன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிடுகிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் என்று இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பெரும் வரவேற்பைப் பெற்ற அக நக பாடல்

பெரும் வரவேற்பைப் பெற்ற அக நக பாடல்

இதற்கிடையே படத்தில் இருக்கும் அக நக பாடல் கடந்த 20ஆம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. தமிழில் இந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாட, இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியிருந்தார். ரஹ்மானின் பக்கா மெலோடியாக அமைந்த இந்தப் பாடலைத்தான் கடந்த ஒருவாரமாக பெரும்பாலானோர் முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அக நக பாடல் செய்த செம சாதனை

அக நக பாடல் செய்த செம சாதனை

இந்நிலையில் அக நக பாடலை இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் யூட்யூபில் பார்த்திருக்கின்றனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. பாடல் வெளியாகி ஒரு வாரத்திலேயே இத்தனை பேர் பார்த்திருப்பதால் இனியும் இந்த எண்ணிக்கை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X