கோவப்படாமலாம் இருக்க முடியாது.. கோவம் மைனசும் கிடையாது.. ஆம்பள மீரா மிதுனாக மாறிய பாலா!

சென்னை: இன்றைய இரண்டாவது புரமோவில் அர்ச்சனா அக்காவை நேருக்கு நேர் முறைத்த பாலாஜியை ஆம்பள மீரா மிதுன் என பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil

16 போட்டியாளர்களிடம் உங்களுக்குள்ளேயே வின்னர் யார் என்றும், இந்த வாரம் வெளியே யாரை அனுப்ப விரும்புகிறீர்கள் என்று கேட்டு ஒரு போட்டியை நடத்தி கொளுத்திப் போட்டுள்ளார் பெரிய பாஸ்.

சனம் ஷெட்டியை டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டு, அர்ச்சனாவை அட்மிட் பண்ணி பாலா வச்சு செய்வதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே ஹாப்பியாகி உள்ளனர்.

மனசுல பிக் பாஸ்னு நினைப்பு

மனசுல பிக் பாஸ்னு நினைப்பு

காமெடி டைம் அர்ச்சனா இப்போ பிக் பாஸ் வீட்டுல நாட்டாமை வேலையையும், பிக் பாஸ் வேலையையும் சேர்த்து பார்த்துட்டு வராங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். விஜய் டிவியின் பொம்மைகளை தன் பக்கம் சேர்த்து வைத்துக் கொண்டு அர்ச்சனா போடும் ஆட்டம் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

அப்பவே சொன்ன கமல்

அப்பவே சொன்ன கமல்

இதுக்குத்தான் கமல், அர்ச்சனா வந்த உடனே என்னோட பட்டத்தை வாங்கிட்டாருன்னு முன்பே கணித்து சொன்னார் போல.. இல்லை, அர்ச்சனாவுக்கு அந்த ரோல் தான் கொடுக்கப் போறாங்கன்னும் ஆண்டவருக்கு தெரிஞ்சிருக்கலாம். கமல் ஷூட்டிங் போயிட்டா அர்ச்சனாவே அந்த வேலையையும் எடுத்து செஞ்சிடுவாருன்னு கலாய்க்கிறாங்க..

கோவம் மைனஸ் கிடையாது

கோவம் மைனஸ் கிடையாது

தற்போது வைரலாகி வரும் 2வது புரமோவில் பாலாஜியை 15வது ஆளாக, அதாவது அடுத்த வாரமே வெளியே அனுப்ப அர்ச்சனா அக்கா முடிவு செய்கிறார். அதுக்கு, அவரோட அல்லக்கை கோஷ்டிகளும் ஒத்து ஊதுகின்றன. தனக்காக யாரும் பேசமாட்டாங்கன்னு தெரிந்து கொண்ட பாலாஜி, கோவப்படாமலாம் இருக்க முடியாது.. கோவம் மைனசும் கிடையாது என அர்ச்சனாவிடம் எகிறும் புரமோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆம்பள மீரா மிதுன்

ஆம்பள மீரா மிதுன்

பிக் பாஸ் வீட்டில் யாரையும் வச்சிப் பார்க்காமல் மனசுல பட்டதை பட்டுப் பட்டுன்னு போட்டு உடைக்கிற பாலாஜி முருகதாஸை ஆம்பள மீரா மிதுன் என ரசிகர்கள் பெயர் வைத்து கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர். சுரேஷுக்கு ஆப்பு வைக்க அர்ச்சனா வந்தா, அந்த அர்ச்சனாவுக்கே ஆப்பு வைக்க அங்க பாலாஜின்னு ஒருத்தர் இருக்காரு என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு

செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு

நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்சது மாதிரி இருந்துச்சு என அர்ச்சனா அக்கா சொல்வது போலவும், உண்மையிலேயே செருப்பால தான் அடிச்சிட்டு இருக்கேன் என பாலாஜி முருகதாஸ் பதிலடி கொடுப்பதாகவும் சந்தானத்தின் வைரல் மீமை போட்டு ரசிகர்கள் வச்சு செய்கின்றனர்.

பஞ்ச பரதேசி

பஞ்ச பரதேசி

எப்போ பார்த்தாலும் சும்மா கோபப்பட்டு கத்திட்டு இருக்கிறது ரியோ ராஜ் தான் என்றும், பாலாஜி தேவையில்லாமல் பேசவில்லை என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். குரூபிஸம் இருக்குன்னு சொன்னதுக்கு தேங்யூ என ரியோ சொல்வது போல போட்டு விட்டு, அதுக்கு, நான் எங்கடா சொன்ன நீ தான் டா சொன்ன பஞ்ச பரதேசி என ரம்யா வெளுப்பது போன்ற மீம்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X