Don't Miss!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- News
அபிராமி.. அபிராமி.. கடைசியில் தெரிந்த உண்மை.. காட்டிக்கொடுத்த வீடியோ.. இப்ப அந்த நாத்தனாரை காணோமாமே
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
என்ன தியேட்டர் எல்லாம் இப்படி காத்து வாங்குது.. அமீர்கான் படத்துக்கு முதல் நாளே இந்த நிலைமையா?
சென்னை: அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், காலையிலேயே மீண்டும் BoycottLalSinghChaddha தான் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
அமீர்கான் படத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு பாலிவுட் ரசிகர்கள் ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட தியேட்டர்கள் காலியாக உள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பு
பாலிவுட் ரசிகர்கள் பாலிவுட் நடிகர்கள் மீது மிகுந்த வெறியுடன் காணப்படுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு அவர்கள் கொண்டாடி வந்த கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் மீதே அவர்களின் வெறுப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. அமீர்கானின் முந்தைய சர்ச்சை பேச்சைகளும், பிகே படத்தில் அவர் இந்து மதத்தை அவமதித்ததையும் வைத்து லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் கடந்த 10 நாட்களாக #BoycottLalSinghChaddha ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தியேட்டர்கள் காத்து வாங்குது
தங்கல் படத்தின் மூலம் 2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்காக முதல் நாளே இந்த ஒரு நிலைமை என மற்ற மாநில ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் ஸ்தம்பித்து போயுள்ளனர். நாடு முழுவதும் லால் சிங் சத்தா போடப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும் பச்சை நிறத்தில் புக் ஆகாமல் இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டுகளை எடுத்துப் போட்டு நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஃபாரஸ்ட் கம்ப் பாருங்க
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஒரிஜினல் படமான டாம் ஹேங்க்ஸின் ஃபாரஸ்ட் கம்ப் படத்தையே பார்த்துடுங்க, அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தை பார்க்க வேண்டாம் என ரசிகர்களுக்கு பாலிவுட்டின் பாய்காட் கேங் கோரிக்கை வைத்து வருகிறது.

இந்துக்கள் முதுகில் குத்திவிட்டு
பிகே படத்தின் மூலம் இந்துக்கள் முதுகிய குத்திய அமீர்கான் இப்போ, லால் சிங் சத்தா படத்தில் சிங் கெட்டப் போட்டுக் கொண்டு கையில் பூங்கொத்துடன் வந்து ஏமாற்ற பார்க்கிறார். அவருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது என பாலிவுட் ரசிகர்கள் பழிக்கு பழி வாங்கி வருகின்றனர்.

சவுத் vs நார்த்
தென்னிந்திய படங்கள் இந்துக் கடவுள்களை எப்படி காட்சிப் படுத்த வேண்டுமோ அப்படி மரியாதையுடனும் மாஸாகவும் காட்டுகின்றனர். ஆனால், வட இந்திய படங்களான பிகே, தாண்டவ் மற்றும் லூடோ கடவுள்களை இழிவுப்படுத்தி உள்ளன. இதில், உங்களுக்கு எது வேண்டும் என நீங்களே முடிவு செய்யுங்கள் என ரசிகர்கள் தாங்கள் ஏன் இந்த தடையை வலியுறுத்துகிறோம் என்பதை தெளிவுப்படுத்தி உள்ளனர்.
Recommended Video

ஒரு ரூபாய் கூட
தைமூர் மம்மிக்காக நாங்க ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டோம் என ஏழைக் குழந்தையை கரீனா கபூர் கண்டு கொள்ளாமல் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் புகைப்படத்தை ஷேர் செய்து வெளுத்து வாங்கி வருகின்றனர். இப்படியே போனால் பாலிவுட் நிலைமை என்ன ஆகும் என்கிற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.