மீண்டும் சண்டை.. டாஸ்க்கில் முட்டிக்கொள்ளும் ஆரி அன்ட் பாலாஜி.. தரமான சம்பவம் இருக்கு.. பரபர புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்க டிக்கெட் டூ ஃபினாலே என பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் இரண்டு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. இதில் ரியோ 12 பாயிண்டுகளுடன் டாப்பில் இருந்தார்

இரண்டாவது புரமோ
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் பாடல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கேபிக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video


முரட்டுத்தனமாக..
இதில் ஓடி பிடித்து விளையாடி ஒருவரை ஒருவர் அவுட்டாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அனைவருமே முரட்டுத்தனமாக விளையாடுவதாக தெரிகிறது.

தடுக்கி விழுந்தா என்னவாகும்?
மேலும் இந்த டாஸ்க்கில் யாரும் ஓடாமல் இருக்க பாலாஜி ஃபர்னிச்சர்களை நடுவில் தூக்கிப்போட்டு தடைகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதனால் கடுப்பாகும் ஆரி, இந்த மாதிரியெல்லாம் விளையாடுறீயே தடுக்கி விழுந்தா என்னவாகும் என்று கேட்கிறார்.

நீ ஆம்பள பையன்தனே
அதற்கு அப்படின்னா ஓடாதீங்க என்று ஆரிக்கு அட்வைஸ் கொடுக்கிறார் பாலாஜி. இதனால் கடுப்பாகும் ஆரி, ஓடினால், நீ ஓடி வந்து பிடிக்கணும், நீ ஆம்பள பையன்தனே என்று கேட்கிறார்.

சும்மா உட்காந்திருக்கலாம்
இதனால் டென்ஷனாகும் பாலாஜி, நீங்க விழணும் என்று போடவில்லை. ஓடக்கூடாது என்று தான் போட்டேன் என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, இந்த மாதிரி கேம் விளையாடுறதுக்கு நான் சும்மா உட்காந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

விளாசும் நெட்டிசன்ஸ்
அப்போது நான் நல்லாதான் விளையாடுகிறேன் என்று நினைக்கிறேன் என பதில் சொல்கிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ. இதனை பார்த்த ரசிகள், இருவரையும் அடித்துக்கொள்ள வைத்தே நிகழ்ச்சியை ஓட்டுகிறீர்கள் என்று விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











