என்னை அசிங்கப்படுத்தக்கூடாது.. பிடிக்கலன்னா பேசாம இருக்கலாம்.. அனிதாவால் மீண்டும் நொந்து போன தாத்தா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அனிதாவுக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நேற்று நவராத்திரி மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கிராம வாசிகளாகவும் நகர வாசிகளாகவும் பிரிந்து பர்ஃபாமன்ஸ் கொடுத்தனர்.

சுமங்கலி அனிதா

சுமங்கலி அனிதா

நவராத்திரியை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் கொலு வைக்கப்பட்டது. கொலுவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கலசம் வைத்தனர். அர்ச்சனா பானையை பிடித்துக் கொண்டிருக்க, சுரேஷ் சக்கரவர்த்தி அருகில் நின்ற அனிதாவை அழைத்து சுமங்கலி நீ முதலில் பானைக்குள் தானியங்களை போட சொன்னார்.

இரு குழுக்கள் பாயிண்ட்ஸ்

இரு குழுக்கள் பாயிண்ட்ஸ்

வரிசையாக அனைத்து பெண் போட்டியாளர்களும் பானைக்குள் அதை அள்ளி போட்டனர். இதனை தொடர்ந்து கிராமம் பெஸ்ட்டா நகரம் பெஸ்ட்டா என இரு குழுக்களும தங்கள் அணி சார்ந்த பாயிண்டுகளை முன் வைத்தனர்.

சுமங்கலி என்பதால் சொன்னார்

சுமங்கலி என்பதால் சொன்னார்

அப்போது தொகுப்பாளராக இருந்த அனிதா சம்பத், நகரம் சார்பாக நானும் சில பாயிண்டுகளை கொடுக்கிறேன் என பேசினார். அப்போது காலையில் நான் சுமங்கலியாக இருப்பதால் என்னை அழைத்து சுரேஷ் சார் அந்த பானைக்குள் போட சொன்னார்.

சுமங்கலியாக இல்லாவிட்டால்

சுமங்கலியாக இல்லாவிட்டால்

நான் சுமங்கலியாக இல்லாவிட்டால் என்னை போட சொல்ல மாட்டார்களா என்றார். மேலும் தனது திருமணத்தின் போது தனது மாமியார் அமங்கலியாக இருந்ததால் எதையும் செய்யாமல் ஓரமாக அழுது கொண்டிருந்தார்.

எல்லா உரிமையும்

எல்லா உரிமையும்

எங்கள் வீட்டில் எல்லோரும் அவரை அழைத்து செய்ய சொன்னோம். இப்படிதான் பல கிராமங்களில் நடக்கிறது. சுமங்கலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண் பெண்தான். அவருக்கு எல்லா உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இலக்கணம் தவறக்கூடாது

இலக்கணம் தவறக்கூடாது

அந்த இடத்தில் சுரேஷை நெகட்டிவாக அனிதா புரஜெக்ட் செய்ததாக கூறி கடும் வேதனை அடைந்தார் சுரேஷ். அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் அதனை சொல்லியும் வருத்தப்பட்டார். இலக்கணம் தவறக்கூடாது என்றும், பேச பிடிக்காவிட்டால் பேசாமல் இருக்கலாம்.

அசிங்கப்படுத்தக்கூடாது

அசிங்கப்படுத்தக்கூடாது

அதற்காக என்னை அசிங்கப்படுத்தக் கூடாது என்றும் ரொம்ப கவலைப்பட்டார். அனிதா தன் வாயாலேதான் கெடுகிறார், ஆனால் நான் செய்வதாக சொல்கிறார் என்றும் அர்ச்சனாவிடம் புலம்பினார். மேலும் என் பெயரை கெடுக்கக்கூடாதும்மா, நான் பிக்பாஸ் வீட்டை வீட்டு கிளம்புகிறேன் என்றும் கூறினார்.

சனத்திடம் நியாயம் கேட்ட அனிதா

சனத்திடம் நியாயம் கேட்ட அனிதா

அர்ச்சனா அதைப்பற்றி அனிதாவிடம் பேசுவதாக கூறினார். அதற்குள் நிஷா, வேறு மாதிரியாக விஷயத்தை கன்வே பண்ணியதால், நான் என் கருத்தை சொன்னேன் இதில் அவருக்கு என்ன என பாலாஜி மற்றும் சனம் ஷெட்டியிடம் நியாயம் கேட்டார் அனிதா.

மன்னிப்பு கேட்கிறேன்

மன்னிப்பு கேட்கிறேன்

அவர்கள் இருவருமே பிரச்சனை என்னவென்றே தெரியாமல் அனிதாவுக்கு அப்பட்டமாக சொம்படித்தனர். தொடர்ந்து டென்ஷனாகவே இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இறுதியாக அனிதா ரியோவிடம் நான் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். அப்போது அவர் பேசும் நிலைமையில் இல்லை. நீ பிறகு பேசு என்றார்.

பின்னா குத்துவேம்மா

பின்னா குத்துவேம்மா

ஆனால் அனிதாவோ, இல்லை நான் இப்போதே பேசுகிறேன், நான் சாரி கேட்கும் போது அவர் நிற்காமல் நடந்து போனால் கூட பரவாயில்லை என்று கூறிவிட்டு சுரேஷ் சார் சாரி என்றார். ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தியோ உன் காலில் விழுகிறேன் என்னிடம் பேசாதேம்மா என்றார். நீ முன்னாள் இப்படி பேசுவாய் ஆனால் பின்னாடி குத்துவாய் என்று கூறி விட்டு சென்றுவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X