twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் ட்ரென்டாகும் #MeToo ஹேஷ்டேக்.. திக்குமுக்காடும் டிவிட்டர்!

    |

    சென்னை: மீடூ என்ற ஹேஷ்டேக் மீண்டும் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

    பெண்களுக்கு பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பதற்காக 2017-ம் ஆண்டு உலக அளவில் மீடு இயக்கம் தொடங்கப்பட்டது.

    அதன்மூலம், உலக அளவில் பல பெண்கள் தங்களுடைய பணியிடங்களில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். அதன்மூலம், பிரபலங்கள் பலரும் இதில் சிக்கினார்கள்.

    தினமும் ஒரு நிறம்.. பக்காவாக தெரியும் முன்னழகு.. ஷாமா சிக்கந்தரின் போட்டோஷூட் ரகசியம் !தினமும் ஒரு நிறம்.. பக்காவாக தெரியும் முன்னழகு.. ஷாமா சிக்கந்தரின் போட்டோஷூட் ரகசியம் !

    பாலியல் புகார்கள்

    பாலியல் புகார்கள்

    குறிப்பாக சினிமா உலகில் மீடூ அமைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹாலிவுட் நடிகைகள் பலரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறினர். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்கள் தண்டனை பெற்று வருகின்றனர்.

    நடிகைகள் புகார்

    நடிகைகள் புகார்

    இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு மொழி சினிமாவை சேர்ந்த நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் கூறித்து மீடூவில் புகார் அளித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மீண்டும் ட்ரென்டிங்

    மீண்டும் ட்ரென்டிங்

    இந்நிலையில் தற்போது மீண்டும் #MeToo என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. இதில் அமெரிக்காவில் கறுப்பு இன இளைஞர் போலீசாரால் மூச்சு திணறடிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது, கேரளாவில் கர்ப்பிணி யானை வெடி மருந்து வைத்து கொல்லப்பட்டது, பாகிஸ்தானில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்த மீடூ மூலம் பேசி வருகின்றனர்.

    அன்பை பரப்புங்கள்

    அன்பை பரப்புங்கள்

    அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இதனை வைத்து கிண்டல் கேலியான கருத்துக்களை பதிவிட்டு பொழுதை போக்கி வருகின்றனர். சிலர் தங்களின் பிரச்சனை குறித்தும், அரசியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் டிவிட்டி வருகின்றனர். மேலும் சிலர் இந்த மீடூ ஹேஷ்டேக் மூலம் உலகம் முழுக்க அன்பை பரப்புங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

    English summary
    Again Metoo hashtag is trending on twitter. Netizens says Create for kindness towards all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X