twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடங்கிய திரையரங்குகள் - எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்!

    By Shankar
    |

    Recommended Video

    தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

    தமிழகத்திதில் சுமார் 1100 திரைகள் படங்களை திரையிட்டு வருகின்றன. இதில் சுமார் 800 திரைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

    தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று முதல் புதிய படங்களை வெளியிடுவது இல்லை என்ற முடிவை அமுல்படுத்தி உள்ளது.

    Again MGR, Rajini movies to screen in Theaters

    தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிட்டு வரும் UFO, கியூப் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களை ரீலீஸ் செய்யாயாததால் திரையரங்குகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோடை வெயில் உக்கிரம் தாங்காமல் நகர்புறங்களில் குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் காதல் ஜோடிகள் குவிவது வழக்கம். ஷாப்பிங் மால்கள் உள்ளே திரையரங்குகள் இருப்பதால் புதிய படம் என்றால் காதல் ஜோடிகள் தியேட்டருக்குள் வருகின்றனர்.

    ஷாப்பிங் மால் ஏசி என்பதால் தியேட்டருக்குள் வரும் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சரிவைச் சந்தித்து

    வருகிறது என்கிறார் சென்னை நகர விநியோகஸ்தர் செல்வம்.

    புறநகர் பகுதிகளில் உள்ள காம்ப்ளக்ஸ், தனித் தியேட்டர்கள் காத்தாடி வருகின்றன. நேற்று பிற்பகல் முதல் பெரும்பான்மையான தியேட்டர்களில் பார்வையாளர் வருகையின்மைமையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

    சனி ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை திரையிட கடும் போட்டி நிலவுகிறது. இப்படங்களை திரையிட டிஜிட்டல் கட்டணம் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய படங்கள் திரையிட கால தாமதமானால் வாரத்தில் இறுதி நாட்களில் மட்டும் தியேட்டரை நடத்திவிட்டு பிற நாட்களில் மூடிவிடலாமா என்ற ஆலோசனையில் புற நகர் தியேட்டர் உ ரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    English summary
    Due to cinema strike many theaters are screening MGR, Rajini's old movies to compensate loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X