ஆமாம் கேபிக்கு என்ன பிரச்சனை.. இன்னைக்கும் அன்சீன்லயே ரியோ சீன்.. 3வது புரமோ எங்க பாஸ்?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியிடாத நிலையில், அன்சீன் புரமோ வெளியிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
மேலும், மறுபடியும் ரியோ மற்றும் சோமசேகர் செய்யும் அட்டகாசத்தை அன்சீன்லயே வைக்கிறீங்களே ஏன் பிக் பாஸ் என கேள்விகளும் கிளம்பி உள்ளன.
இருவரும் சேர்ந்து கேபியை போட்டு ஓட்டுவதும், ஜித்தன் ரமேஷ் ஆடுவதும் சிறப்பு.

கடல்லே இல்லையாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வரும் என மதியம் 3 மணியில் இருந்து அடிக்கடி விஜய் டிவி ட்விட்டர் பக்கத்திற்கு சென்று போய் பார்த்து ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம். கடைசி வரைக்கும் அந்த 3வது புரமோவை காட்டாமலே ஓட்டிட்டாங்களே என ரசிகர்கள் நொந்து போயுள்ளனர்.

அன்சீன் புரமோ
ஆனால், விஜய் மியூசிக்கில் டான்னு அன்சீன் புரமோ வந்துடுச்சு. இதை பார்த்த உடனே ரசிகர்கள், அன்சீன் புரமோ போடுறீங்க, 3வது புரமோவை ஏன் போடல என்கிற கேள்விகளையும், இந்த அன்சீன் புரமோவையே மூன்றாவது புரமோவாக போட்டு இருக்கலாமே என பதிலையும் சொல்லி வருகின்றனர்.

மறுபடியும் அன்சீன்ல
ரியோ ராஜ் மற்றும் சோமசேகர் பண்ணும் பர்ஃபார்ம்களை தொடர்ந்து அன்சீன் புரமோவிலே போட்டு பிக் பாஸ் எடிட்டர் கடுப்பேற்றுகிறார் என்றும், ரசிகர்கள் திட்டி வருகின்றனர். நேற்றும் இப்படித் தான் அன்சீனில் ரியோ மற்றும் சோமின் சீனை காட்டி விட்டு, பின்னர் அதை எபிசோடிலே வைத்து விட்டனர். இது என்ன பொழப்பு என்றும் காரி துப்புகின்றனர்.

ஃபைனலுக்கு புரமோட் பண்றாங்க
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான ரியோ ராஜை பிக் பாஸ் ஃபைனலுக்கு புரமோட் பண்ணவே இப்படி பண்றாங்க என்றும், அவர் மீது மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்ராயத்தை க்ரியேட் பண்ணவே இப்படி அன்சீனில் காட்டி விட்டு, பின்னர் நிகழ்ச்சியில் அவரது சீன்களை அதிகமாக சொருகி வைத்து விட்டு, அவரை பற்றி பேச வைக்கின்றனர் என்றும் விஜய் டிவியின் முகத்திரையையும் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

கேபிக்கு என்ன ஆச்சு
வீடியோ கால் போட்டு பேசுவது போல ரியோவும் சோமசேகரும் பண்ணும் காமெடியில், அருகே நடந்து வரும் கேபியின் நடையை வைத்து இருவரும் கேபிக்கு என்ன ஆச்சு, அவங்க ஏன் இப்படி நடக்குறாங்க, ரொம்ப முத்திடுச்சோ என கேபிக்கு ஃபைல்ஸ் பிராப்ளம் ரேஞ்சுக்கு இருவரும் மரண ஓட்டு ஓட்டும் புரமோ வீடியோ அன்சீன் புரமோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











