விடாது துரத்தும் ‘பாகுபலி’ பிரச்சினை.. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீசாவதில் மீண்டும் சிக்கல்.. !

அர்கா மீடியா பெற்றுள்ள தடையாணையின் காரணமாக எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இந்த முறையும் ரிலீசாகுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

Recommended Video

Watch Video : Enai Nokki Paayum Thotta is in struggle

சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக கடந்த ஆண்டு தான் முடிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இயக்குனர் கவுதம் மேனனின் கடன் பிரச்சினையும் இதற்கு முக்கிய காரணம்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்நிலையில் வரும் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'மறுவார்த்தை பேசாதே' பாடல் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. இதனால் இப்பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். மேலும் முதல்முறையாக தனுஷ் - கவுதம் மேனன் இணைந்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரிலீசில் சிக்கல்

ரிலீசில் சிக்கல்

ஆனால் இம்முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தெரிகிறது. படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகுபலி பட வசூல் பாக்கி தொடர்பாக அர்கா மீடியா தொடர்ந்த வழக்கில் இந்த படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியிடும் ராஜராஜனின் கே புரொடக்ஷன்ஸ் தான் பிரச்சினைக்கு மூலக்காரணம் எனக் கூறப்படுகிறது.

தடையை நீக்க முயற்சி

தடையை நீக்க முயற்சி

அர்கா மீடியா தொடர்ந்த வழக்கில் இருந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை நீக்க படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் முயன்று வருகிறது. ஆனால் அது 6ம் தேதிக்குள் முடியுமா என்பது சந்தேகமே. எனவே எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே கொடுக்கும் என தெரிகிறது.

சிந்துபாத் பிரச்சினை

சிந்துபாத் பிரச்சினை

கே.ராஜராஜன் தயாரிப்பின் விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்துக்கும் இதேபோல் தான் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது விஜய் சேதுபதி தலையிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அர்கா மீடியா நிறுவனத்துக்கு செட்டில் செய்ததால் அந்த படம் ரிலீசானது.

உதவ முன்வருவார்களா?

உதவ முன்வருவார்களா?

ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை இயக்குனர் கவுதம் மேனன் ஏற்கனவே கடன் பிரச்சினையில் இருக்கிறார். சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு கடனில் இருப்பதால் அவரால் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க இயலாது. அதேபோல் தனுஷுக்கும் இந்த படத்தில் சம்பள பிரச்சினை உள்ளது. அதை தான் அவர் சமீபத்தில் சுட்டிக்காட்டி பேசினார். எனவே யாரும் உதவ முன்வராத நிலையில், படம் ரிலீசாவது சந்தேகமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X