அச்சோ, தல க்யூட்டா ரொமான்ஸ் எல்லாம் பண்ணுது: ரிப்பீட் மோடில் Agalaathey

By Siva

Recommended Video

Agalaathey Lyrical Video : Nerkonda Paarvai | Ajith Kumar | Boney Kapoor

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் அகலாதே பாடல் நிச்சயம் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் வரிசையில் இடம்பெறும்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அகலாதே பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அகலாதே

அகலாதே பாடல் வரிகள் இனிமை. தூய தமிழில் கேட்க நன்றாக உள்ளது. பாடலுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் நம்ம யுவனின் தேனிசை என்பதை மறுக்க முடியாது. லிரிக்கல் வீடியோ முழுவதும் வந்த அஜித், வித்யா பாலனின் புகைப்படத் தொகுப்புகள் அருமை. வித்யா பாலனின் கண்களே கதை பேசுகிறதே. இதை பார்க்கும் போது இவருக்கா நடிக்கத் தெரியவில்லை என்று ஒரு காலத்தில் கோலிவுட்டில் இருந்து விரட்டிவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

அஜித்

அஜித்

தல வழக்கம் போன்று சால்ட் முடியுடன் இருக்கிறார். அவரை அப்படியே பார்த்து பழகியதால் வினோதமாக தெரியவில்லை. அவருக்கும், வித்யா பாலனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரொம்பவே அழகாக உள்ளது. தல ரொமான்ஸ் செய்வதை பார்க்கும்போது க்யூட்டாக உள்ளது. அவர் இளமையாக இருக்கும்போது நடித்த படங்கள் சில நினைவில் வந்து செல்கிறது.

செம

செம

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன், மனைவிக்கு இடையேயான காட்சிகள் பெரிதாக இல்லை. ஆனால் நேர்கொண்ட பார்வையில் அப்படி கிடையாது. அகலாதே லிரிக்கல் வீடியோவை பார்க்கும் போது அந்த பாடலுக்கான நிஜ வீடியோவை உடனே பார்க்க வேண்டும் போன்று உள்ளது. நிஜத்தில் நல்ல கணவனான அஜித் அதையே திரையில் நடிப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அகலாதே பாடலை ரிப்பீட் மோடில் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

மகிழ்ச்சி

வித்யா பாலன், அஜித் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. பாடல் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் கோலிவுட்டுக்கு வந்துள்ள வித்யா பாலனை வரவேற்று வாழ்த்தியுள்ளனர். கண்களே காதல் கதை சொல்லுதே வித்யா மேடம் என்று தெரிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் ரீமேக் தான் என்றாலும் அதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X