குட் நியூஸ்! ஒரே மேடையில் சூர்யா - கார்த்தி! பிறந்தநாள் முடிந்த அடுத்த நாளே ரசிகர்களுக்கு ட்ரீட்!

சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய சினிமா குடும்பங்களில் நடிகர் சிவக்குமாரின் குடும்பமும் ஒன்று. சிவக்குமார் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா என அனைவரும் நடிகர்கள்தான். இதில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டைமெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி படங்களைத் தயாரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு இவரது ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து சொன்னார்கள். சென்னை முகப்பேரு அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு சூர்யா ரசிகர் மன்றத்தினர் தங்க மோதிரம் அணிவித்தனர். இது மட்டும் இல்லாமல், கடந்த வாரத்தில் நடிகர் சூர்யா உட்பட ரசிகர் மன்றத்தினரும் ரத்த தானம் செய்தனர்.

Sivakumar Suriya Karthi

ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் இப்படி இருக்க, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான கங்குவா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் அவரது 44வது படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சூர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். இந்த இரண்டுமே சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.

Sivakumar Suriya Karthi

ரசிகர்களுக்கு ட்ரீட்: இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த கையுடன் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேசனின் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியும் கலந்து கொள்கின்றார். இவர்கள் மட்டும் இல்லாமல் சூர்யா கார்த்தியின் தந்தையும் நடிகருமான சிவக்குமாரும் கலந்து கொள்கின்றார். அகரம் பவுண்டேசன் இந்த நிகழ்ச்சி முன்னெடுத்தாலும், நிகழ்ச்சியின் முக்கிய அங்கமே, சிவக்குமார் நடத்தி வரும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாதான்.

Sivakumar Suriya Karthi

அகரம்: நடிகர் சிவக்குமார் கடந்த 45 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்த கல்வி அறக்கட்டளையின் மூலம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவ மாணவியர் தங்களது பட்டப் படிப்பை முடித்துள்ளனர். அப்பா சிவக்குமார் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையைப் பார்த்துதான், சூர்யாவும் அகரம் பவுண்டேசனைத் தொடங்கி அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களை குறிப்பாக படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியாமல் படிப்பினை பாதியில் கைவிட்ட மாணவ மாணவிகளை தேடிப் பிடித்து, அவர்களுக்கு கல்வி வழங்கி வருகின்றது.

Sivakumar Suriya Karthi

ஒரே மேடையில்: அதேபோல் நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் அறக்கட்டளை சார்பில் உழவன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி சென்னை , சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெறுகின்றது. இதில் நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

Sivakumar Suriya Karthi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X