ஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா?: சீறும் நடிகை

By Siva

மும்பை: ஆண் செய்தால் தவறு இல்லை. அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றமா என்று பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸை விவாகரத்து செய்த பிறகு நடிகை மலாய்கா அரோரா நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு அர்ஜுன் கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Age difference: Malaika Arora blasts trollers

காதல் விஷயத்தில் தந்தையின் பேச்சை கேட்பதாக இல்லையாம் அர்ஜுன். 45 வயதாகும் மலாய்கா தன்னை விட 12 வயது சிறியவரான அர்ஜுனை காதலிப்பதால் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

சித்தி வயது பெண்ணையா காதலிப்பது என்று நெட்டிசன்கள் அர்ஜுன் கபூரையும் கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் வயது வித்தியாசம் குறித்து மலாய்கா கூறியிருப்பதாவது,

ஒரு பெண் தன்னைவிட வயதில் குறைந்த ஆணை காதலிக்கக் கூடாதா?. அவர் நம் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வந்தால், காதலிப்பதில் என்ன தவறு?. எனக்கு 45 வயதாகிறது. அதனால் நான் காதலிக்கவே கூடாது என்று இல்லை. என்னை விட சிறியவருடன் எனக்கு ஸ்பெஷலான உறவு ஏற்பட்டதில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அடுத்தவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை நான் கண்டுகொள்வது இல்லை. எனக்கு என் மகன், என் குடும்பம், என் காதலர், என் நண்பர்கள் தான் முக்கியம். முன்பு நான் வேலை செய்து கொண்டே மகனை பார்த்துக் கொண்டேன், தற்போதும் அதையே செய்கிறேன். என்ன முன்பு கணவர் இருந்தார், தற்போது இல்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

இரண்டாவது முறை என் வாழ்வில் காதல் வந்துள்ளது. இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது அரிது. அப்படி இருக்கும்போது நான் ஏன் அந்த வாய்ப்பை கை நழுவவிட வேண்டும்?. பிற தாய்களை போன்று என் மகன் அர்ஹான் கானுக்கு தேவையான அனைத்தையும் நான் தான் பார்த்து பார்த்து செய்கிறேன். நானும், அர்பாஸ் கானும் விவாகரத்து பெற்றாலும் மகன் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்.

ஒரு ஆண் தன்னை விட சின்ன பெண்ணை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ பாராட்டுகிறோம். அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மலாய்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X