விஜய் – லோகேஷ் கூட்டணியில் இணையும் ஏஜெண்ட் டினா… அப்போ தளபதி 67-லயும் தரமான சம்பவம் தானா?
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் இணைகிறார் விஜய்.
தளபதி 67 மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் தளபதி 67
விஜய் தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் தீயாக பரவி வருகின்றன. வாரிசு படத்தை விடவும் விஜய்யின் 'தளபதி 67'-க்கு தான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளதே முக்கியமான காரணமாகும்.

மிரட்டும் கூட்டணி
மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, தளபதி 67ல் மீண்டும் சம்பவம் செய்ய ரெடியாகிவிட்டனர். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில் தளபதி 67ல் 6 முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சஞ்சய் தத், பிருத்விராஜ், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. அதேபோல், இந்தப் படத்தில் சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஏஜெண்ட் டினா
லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, க்ளைமேக்ஸில் சூர்யா என தரமான மல்டி ஸ்டார் படமாக மாஸ் காட்டியது. இத்தனை டாப் ஹீரோக்களுக்கு மத்தியில் ஏஜெண்ட் டினா என்ற கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம சர்ஃப்ரைஸ்ஸான ஆக்சன் ட்ரீட்டாக அமைந்தது. பல படங்களில் டான்சராக பணிபுரிந்துள்ள வசந்தி தான், இந்த ஏஜெண்ட் டினா கேரக்டரில் நடித்திருந்தார். க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியில் சேலை கட்டிக் கொண்டு ஆக்சனில் துவம்சம் செய்து ரசிகர்களை அசரடித்தார் ஏஜெண்ட் டினா.

தளபதி 67ல் என்ட்ரி
இந்நிலையில், தளபதி 67 படத்திலும் ஏஜெண்ட் டினா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67 கேங்ஸ்டர் ஜானரில் உருவாகவுள்ள நிலையில், ஏஜெண்ட் டினாவும் இந்தப் படத்தில் கமிட் ஆகியுள்ளது, ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. விக்ரம் படத்தில் ஆக்சனில் மிரட்டியதைப் போல, தளபதி 67லும் ருத்ரதாண்டவம் ஆடுவாரா என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். பல வருடங்களாக டான்ஸாரக இருந்த வசந்தி, ஏஜெண்ட் டினாவாக அறிமுகமான பின்னர், இப்போது பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











