Aghathiyaa X Review: ஜீவாவுக்கு வெற்றியை கொடுத்தாரா பா. விஜய்?.. அகத்தியா ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: தேசிய விருது வென்ற பாடலாசிரியர் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்தில் ஜீவா, ராஷி கன்னா மற்றும் அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அகத்தியா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு சோஷியல் மீடியாவில் கொடுத்து வரும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம்.

கடந்த ஆண்டு ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பல ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு வெற்றிப் படமாக பிளாக் மாறியது. அந்த படத்தை விட பெரிய பொருட்செலவில் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள அகத்தியா வசூல் வேட்டை நடத்துமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Aghathiyaa Aghathiyaa review jiiva

இந்த படத்தில் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மைய கருவாக எடுத்து பா. விஜய் இயக்கியுள்ள நிலையில், ஜீவா ரசிகர்கள் படத்தை பார்த்து ஹேப்பி ஆனார்களா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..

அகத்தியா விமர்சனம்: ஃபேண்டஸி ஹாரர் படமாக அகத்தியா படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார். சாதாரண மனிதராக வரும் ஜீவா எப்படி இந்த ஃபேண்டஸி ஹாரர் கதைக்குள் சிக்குகிறார் என்பதை அழகாக படமாக்கியுள்ளனர். அர்ஜுன் இன்னொரு ஹீரோவாகவே நடித்துள்ளார். ராஷி கன்னா கொடுத்த வேலையை நீட்டாக செய்துள்ளார். கிளைமேக்ஸ் சிஜி போர்ஷன் குழந்தைகளை கவரும். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிதாக கவரவில்லை. ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். 5க்கு 3 ரேட்டிங் என இந்த நெட்டிசன் விமர்சனம் கொடுத்துள்ளார்.

Aghathiyaa Aghathiyaa review jiiva

நல்லா எடுத்திருக்கலாம்: ஜீவாவை விட இந்த படத்தில் அர்ஜுன் தான் மெயின் ஹீரோவாக தெரிகிறார். படத்தை இயக்கிய பா. விஜய் தேவையற்ற கமர்ஷியல் கிரிஞ்சுகளை உட்புகுத்தாமல் படத்திற்கு தேவையான விஷயத்தை மட்டுமே எடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாகவே வந்திருக்கும். கதை நல்லாவே இருக்கு ஆனால், ஸ்க்ரீன் ரைட்டிங் தான் சொதப்பிவிட்டது. யுவன் இசை சில இடங்களில் வொர்க் ஆகியிருக்கிறது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

Aghathiyaa Aghathiyaa review jiiva

சித்த மருத்துவத்தின் சிறப்பு: அகத்தியா திரைப்படம் பார்க்க நன்றாகவே உள்ளது. சித்த மருத்துவத்தின் சிறப்பை ஃபேண்டஸி ஹாரர் படமாக பா. விஜய் கொடுத்திருக்கிறார். ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னாவின் நடிப்பு அருமை. 5க்கு 3.5 ரேட்டிங் தருகிறேன் என ரமேஷ் பாலா தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

Aghathiyaa Aghathiyaa review jiiva

இன்டெர்வெல் வேறலெவல்: பேய் படங்கள் தனக்கு செட்டாகின்றன என தொடர்ந்து ஜீவா களத்தில் குதித்து விட்டார் என்றே தெரிகிறது. அகத்தியா படத்தின் இடைவேளை ட்விஸ்ட் வேறலெவல் என படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கண்டிப்பாக இந்த படமும் ஜீவாவுக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுக்கும் படமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், பிளாக்பஸ்டர் படமாக மாறும் வாய்ப்பை இந்த படம் இழந்து விட்டதாகவும் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

Aghathiyaa Aghathiyaa review jiiva

சப்தம் ரிலீஸ் சிக்கல்: KDM பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்ட பலர் நடித்த சவுண்ட் ஹாரர் படமான சப்தம் இன்று காலை காட்சி வெளியாகமல் போனது ரசிகர்களை அப்செட் ஆக்கியது. அந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்களும் வேறு வழியில்லாமல் ஜீவாவின் அகத்தியா படத்தை பார்த்துள்ளனர்.

Aghathiyaa Aghathiyaa review jiiva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X