கே.ஜி.எஃப் 2 ‘’அகிலம் நீ’’ அம்மா பாடல் வெளியானது.. ஏமாற்றம்தான்.. அந்த பாடல் அளவுக்கு இல்லை!

சென்னை : கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அகிலம் நீ என்ற அம்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுவந்த நிலையில், ஒருவழியாக படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிவடைந்து ஏப்ரல் 14ந் தேதி படம் வெளியாக உள்ளது.

கே.ஜி.எஃப்

கே.ஜி.எஃப்

பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ்

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே கே.ஜி.எஃப். : சாப்டர் 2' திரைப்படம் ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது .இதையடுத்து,படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிந்துள்ளதால், கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படம் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

வேறலெவலில்

வேறலெவலில்

இந்தப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பான் இந்தி திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தைக்காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் வேறலெவலில் இருக்கும் என்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.

ஏமாற்றம்தான்

ஏமாற்றம்தான்

இந்நிலையில், கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் அகிலம் நீ என்ற அம்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தை தூக்கி நிறுத்தியேதே 'கருவினில் என்னை சுமந்து' பாடல் தான். கறையாத கல் மனதையும் அந்த பாடல் கறைந்துவிடும் என்று சொல்லலாம். ஆனால், கே.ஜி.எஃப் 2 பாகத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், அந்த பாடல் அளவுக்கு பாடலில் உயிர் இல்லை என்றும், இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம், சிறிது ஏமாற்றம் தான் என்று ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X