twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெண் ரூபத்துல எமன பார்த்திருக்கீங்களா'... மிரட்டும் அக்னி தேவ்!

    பாபி சிம்ஹா நடிக்கும் அக்னி தேவ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    |

    சென்னை: பாபி சிம்ஹாவின் அக்னி தேவ் பட டிரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

    'சென்னையில் ஒருநாள் 2' பட இயக்குநர் ஜான் பால் ராஜ் அடுத்து இயக்கி வரும் படம் அக்னி தேவ். அரசியல் களத்தை மையப்படுத்தி சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    Agni dev trailer out now

    பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    பேருந்து நிலையத்தில் நடைபெறும் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கொலை, அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, அவருக்கும் பெண் அரசியல் தலைவருக்கும் இடையே நடக்கும் மோதல்... இது தான் அக்னிதேவ்வின் கதைக்களம் என்பது டிரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது.

    திருட்டுப்பயலே 2 படத்திற்குப் பிறகு மீண்டும் போலீசாகி இருக்கிறார் பாபி சிம்ஹா. சாமி 2வில் வில்லனாக நடித்தவர், அப்படியே மீண்டும் கம்பீரமான போலீசாக கெத்துக் காட்டியிருக்கிறார். காக்கிச் சட்டைக்குள் கம்பீரம் காட்டுகிறார்.

    டிரெய்லரில் மிரட்டும் மற்றொரு நபர் என்று சொன்னால் அது ரொம்ப குறைவு, டிரெய்லர் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் நபர் என்று தான் மதுபாலாவைச் சொல்ல வேண்டும்.ரோஜாவில் பார்த்த அந்த அப்பாவிப் பெண்ணா என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார்.

    சக்கர நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் ஷாட், கையைத் தூக்கி வணக்கம் வைக்கும் ஸ்டைல் என தன் இன்னொரு முகத்தை இப்படத்தில் காட்டியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதுவும் வில்லியாக மதுபாலா. இரு கை தட்டி வரவேற்க வைக்கிறார்.

    ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவலைப் படிக்கும் உணர்வை கொஞ்சமும் குறைக்காமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் என்றே தெரிகிறது. டிரெய்லரே பதைபதைப்பைக் கூட்டுகிறது. திக் திக் என இதயத் துடிப்பை எகிற வைக்கிறது பின்னணி இசை.

    டிரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. அதுவும் கட்சியினரை பார்த்து மதுபாலா பேசும் வசனங்கள், அனல் கக்குகின்றன. "என் வீல்சேர் டயர நக்கிக்கிட்டு கிடக்கிறதா இருந்தா கெட", "பொம்பள ரூபத்துல எமன பார்த்திருக்கியா" போன்ற வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

    படத்தில் இத்தனை பிளஸ்கள் இருந்தாலும், வில்லியாக பெண் அரசியல் தலைவர் ஒருவரை காட்டியிருப்பது, சமகால அரசியலை நையாண்டி செய்திருப்பது என நிச்சயம் பட ரிலீஸ் சமயத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம். எப்படியோ அக்னிப் பரீட்சை செய்யாமல் அக்னி தேவ் ரிலீசானால் சந்தோஷமே. சென்சாரில் வெற்றிகிடைக்க வாழ்த்துகள்.

    English summary
    The trailer of Bobby Simha's Agni dev is out now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X