twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னமும் இன்ஸ்பிரேஷனும்.. அக்னி நட்சத்திரம் முதல் பொன்னியின் செல்வன் வரை.. பர்த்டே ஸ்பெஷல்!

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் 64வது பிறந்த நாள் இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்து மழையில் அட்டகாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காதல், அரசியல், பாசம், பிரிவு, வலி, கோபம், துரோகம், இதிகாச தாக்கம் என அனைத்து ஏரியாக்களிலும் இறங்கி சிக்ஸர் அடித்துள்ளார்.

    மாஸ்டர்பீஸ் படங்களை இயக்கும் இந்த மாஸ்டரின் இயக்கத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த படங்கள், இதிகாசங்கள் மற்றும் நாவல் குறித்து இங்கே காண்போம்.

    அப்போது அஜித் அவ்வளவு பெரிய ஹீரோ என்று தெரியாது.. ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல நடிகை!அப்போது அஜித் அவ்வளவு பெரிய ஹீரோ என்று தெரியாது.. ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்த பிரபல நடிகை!

    காட்ஃபாதரும் நாயகனும்

    காட்ஃபாதரும் நாயகனும்

    ஹாலிவுட் படங்களை பார்த்தும், இதிகாசங்களை படித்தும் பல இன்ஸ்பிரேஷன்களை கொண்டு தனது படங்களை மணிரத்னம் இயக்கி உள்ளார். இயக்கியும் வருகிறார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற காட்ஃபாதர் படம் உலகளவில் பல இயக்குநர்களுக்கு இன்ஸ்பையர் ஆகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னம், அக்னி நட்சத்திரம் மற்றும் நாயகன் படங்களில் காட்ஃபாதர் படத்தை பல இடங்களில் இன்ஸ்பயர் செய்து எடுத்துள்ளார்.

    கர்ணனும் தளபதியும்

    கர்ணனும் தளபதியும்

    மகாபாரதத்தில் வரும் கொடை வள்ளல் கர்ணனை இன்ஸ்பயராக கொண்டு மணிரத்னம் இயக்கிய தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கர்ணனை பேழையில் போட்டு அனுப்புவது போல தளபதி ரஜினியை ரயிலில் ஏற்றி அனுப்பும் காட்சி முதல், துர்யோதனனாக மம்முட்டியையும், அர்ஜுனனாக அரவிந்த் சாமி வரை அனைத்து கதாபாத்திரங்களும் இதிகாச இன்ஸ்பிரேஷன் தான்.

    எம்.ஜி.ஆர் – கருணாநிதி

    எம்.ஜி.ஆர் – கருணாநிதி

    அரசியல் தலைவர்களின் பயோபிக் படங்களை இயக்குவது தற்போது டிரெண்டாகி வருகிறது. ஆனால், அதற்கு அஸ்திவாரம் போட்டதே இயக்குநர் மணிரத்னம் தான். எம்.ஜி.ஆர் - கருணாநிதி எனும் இரு முதல் அமைச்சர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவகமாக ஒரு படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மணிரத்னம்.

    இலங்கை பிரச்சனை

    இலங்கை பிரச்சனை

    இலங்கை தமிழர்களின் பிரச்சனையை எப்படியாவது தனது படத்தில் சொல்லி விட வேண்டும் என நினைத்த இயக்குநர் மணிரத்னம், கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எம்.எஸ் விஸ்வநாதன் குரலில் இடம்பெற்ற "விடை கொடு எங்கள் நாடே" என்ற பாடல் அனைத்து ஈழ அகதிகளுக்கும் தேசிய கீதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

    திருபாய் அம்பானி

    திருபாய் அம்பானி

    ரிலையன்ஸ், ஜியோ என இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை இன்ஸ்பயர் ஆகக் கொண்டு அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் மணிரத்னம் உருவாக்கிய படம் தான் குரு. இந்த படத்திற்கு சர்வதேச அரங்கில் பல அங்கீகாரங்கள் கிடைத்தன.

    ராமாயணமும் ராவணனும்

    ராமாயணமும் ராவணனும்

    தளபதி படத்தை போல மறைமுகமாக அல்லாமல், நேரடியாக டைட்டிலிலேயே ராவணன் என போட்டு இந்த படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். படத்தின் தலைப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் கிளம்பினாலும், தனது உறுதியான நிலைப்பாட்டால் இந்த படத்தை ரிலீஸ் செய்தார் மணிரத்னம். விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயின் அசத்தலான நடிப்பு இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் பாராட்டப்படும்.

    கல்கியின் நாவல்

    கல்கியின் நாவல்

    இந்தியாவின் இதிகாசங்கள், ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷன் கொண்டு பல படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மணிரத்னம், தற்போது, தனது நீண்ட நாள் கனவான அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், பார்த்திபன், திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    English summary
    Ace Director of Indian Cinema Celebrated his 64th birthday today. Here we listed out some of the movies where Mani Ratnam gets inspired and maked as a movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X