சீனுவாக சர்ப்ரைஸ் தருவார் விஜய் ஆண்டனி.. அக்னிச் சிறகுகள் கேரக்டர் லுக் ரிலீஸ்!

சென்னை: விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அக்னிச் சிறகுகள் படத்தின் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது.

மூடர்கூடம், அலாவுதினும் அற்புத கேமராவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் உருவாகி வருகிறது.

தற்போது, சீனு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் வித்தியாசமான லுக் வெளியாகியுள்ளது.

அக்னிச் சிறகுகள்

நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் அக்னிச் சிறகுகள் படம் உருவாகி வருகிறது. அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகம் இளைஞர்களின் எழுச்சிக்காக எழுதப்பட்ட நிலையில், அந்த தலைப்பில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. டி. சிவா தயாரித்து வரும் இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசன், நாசர் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

டபுள் லுக்

டபுள் லுக்

விஜய் ஆண்டனிக்கு இந்த படத்தில் இரண்டு லுக் இருக்கும் என இயக்குநர் நவீன் கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள சீனு, லுக் படத்தில் பல சர்ப்ரைஸ்களை கொடுக்கும் என்றும், இதுவரை விஜய் ஆண்டனியை பார்த்திராத கதாபாத்திரத்தில் அக்னிச் சிறகுகள் படத்தில் காணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

அக்னிச் சிறகுகள் படத்தின் ஷூட்டின், சென்னை, கொல்கத்தா, ரஷ்யா, அல்மாட்டி, கஜகஸ்தான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றதாம். நவீன் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் அக்னிச்சிறகுகள் படம் உருவாகி வருகிறது.

காத்திருப்பு

காத்திருப்பு

கஜகஸ்தானில் அக்னிச்சிறகுகள் படத்தின் அடுத்த படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அங்கு பனிப்பொழிவில் ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் அங்கே பொழியும் பனிப்பொழிவுக்காக காத்திருப்பதாக இயக்குநர் நவீன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X