விழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்…ஐரோப்பா பறக்கும் படக்குழு
Recommended Video
சென்னை: நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அக்னி சிறகுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சுமார் 50 நாட்களுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பை ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற நகரங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டேவும் இணைந்து நடிக்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல ஜார்னர் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியும், என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து பல வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கும் அருண் விஜய்யும் இணையும் படம் தான் அக்னி சிறகுகள்.

இத்திரைப்படத்தை, மாற்று சினிமா என்று சொல்லப்படும் படங்களுக்கு வித்திட்ட மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்குகிறார். இவர் கடைசியாக இயக்கியது மூடர் கூடம் படம் என்றாலும், அதற்கு பின் விசாகனை வைத்து இவர் இயக்க இருந்த படமானது தயாரிப்பின் போது பாதியில் நிறுத்த பட அதற்கு பின் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டாலும் கூட, சில காரணங்களுக்காக வெளியாவது தள்ளி போய் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அக்னி சிறகுகள் படத்தை கிடப்பில் விட்டு விடக்கூடாது என இப்படத்தின் வேலைகளை துவங்கிய நவீன், தற்போது படப்பிடிப்பிற்காக படக்குழுவுடன் ஐரோப்பா செல்ல உள்ளார்.
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவில், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற நகரங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனல் பறக்கும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதால் படக்குழு தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தை டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு கப்பல், மூடர்கூடம், கொளஞ்சி, அலாவுதீனின் அற்புத கேமரா போன்ற படங்களுக்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டேவும் இணைந்து நடிக்க உள்ளனர். படக்குழு நாளை இரவு ஐரோப்பா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











