அந்த ஹீரோயினுக்கு பதில் இந்த நடிகை.. ரீஷூட்டுக்கு காத்திருக்கும் அருண் விஜய்யின் அக்னிச் சிறகுகள்!
சென்னை: ஹீரோயினை மாற்றி இருப்பதால் அக்னிச் சிறகுகள் படக்குழு ரீ ஷூட்டுக்கு காத்திருக்கிறது.
Recommended Video
அருண் விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கும் படம், 'அக்னிச் சிறகுகள்'.
'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

நடிகை ரைமா சென்
இதில், அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் கதை வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான்
இதனால் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் நடந்துள்ளது. கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் ஷூட்டிங் நடந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்ற படக்குழு அங்கு உறைபனி குளிரில் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை படமாக்கி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து
அதை முடித்து ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட சில ஐரோப்பிய நாடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இதை முடித்துக்கொண்டு கொரோனாவுக்கு முன்பாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை. அரசு அனுமதி வழங்கியதும் ஷூட்டிங்கை தொடர பல படங்கள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனாவுக்கு முன்
'அக்னிச் சிறகுகள்' படத்துக்காக மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டி இருக்கிறதா? என்று இயக்குனர் நவீனிடம் கேட்டபோது, அவர் மறுத்தார். 'நல்லவேளையாக கொரோனாவுக்கு முன்பாகவே வெளிநாட்டு போர்ஷனை முடித்துவிட்டோம். இப்போது கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் மொத்தம் 10 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. அதை எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்றார் நவீன்

அக்ஷரா ஹாசன்
இந்தப் படத்தில் முதலில் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்தார். அவர் தொடர்பான காட்சிகளை படமாக்கி இருந்தனர். ஆனால், அவர் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்துக்காக, இதில் இருந்து பாதியில் விலகி விட்டார். இதனால் அவர் நடித்த காட்சிகளை, நடிகை அக்ஷரா ஹாசனை நடிப்பில் படமாக்கி வருகின்றனர். இப்போது அக்ஷரா ஹாசன் காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











