அக்‌ஷரா ஹாசன், விஜய் ஆண்டனி காட்சிகள்.. ரீ ஷூட்டுக்காக கொல்கத்தா செல்கிறது 'அக்னிச் சிறகுகள்' டீம்!

By

சென்னை: அக்னிச் சிறகுகள் படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்புகள் இப்போது தொடங்கியுள்ளன.

அருண் விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கும் படம், 'அக்னிச் சிறகுகள்'.

'மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

வெளிநாட்டுக் கதை

வெளிநாட்டுக் கதை

இதில், அக்‌ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். பாட்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் கதை வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

அல்மாட்டி நகரில்

அல்மாட்டி நகரில்

படத்தின் பெரும்பாலான காட்சிகள், கஜகஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்ற படக்குழு அங்கு உறைபனி குளிரில் படப்பிடிப்பை நடத்தியது. அங்குள்ள அல்மாட்டி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை படமாக்கினர்.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து உள்பட சில ஐரோப்பிய நாடுகளிலும் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்நிலையில் லாக்டவுன் காரணமாக தடைபட்டு இருந்த ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

ஷாலினி பாண்டே

ஷாலினி பாண்டே

இந்நிலையில் படக்குழு, கொல்கத்தா செல்கிறது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்தில் முதலில் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் விலகியதால், அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். ஷாலினி பாண்டேவை வைத்து எடுத்த காட்சிகளை மாற்றி, அக்‌ஷராவை வைத்து ரீ ஷூட் செய்து வருகின்றனர். இந்த மாதத்துடன் இதன் ஷூட்டிங் நிறைவடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X