உலகநாயகனுக்கு வாழ்த்து கூறியுள்ள அக்னி சிறகுகள் படக்குழு

சென்னை : இன்று கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் .இதையடுத்து பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது மூடர் கூடம் இயக்குனர் நவீன் தனது அக்னி சிறகுகள் படக்குழுவுடன் கமல் ஆபிசில் நின்று கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி ,அன்றும் இன்றும் என்றும் நான் கண்டு வியங்கும் என் கமல் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி ட்விட்டரில் பதிவேற்றிருந்தார். அந்த புகைப்படம் அக்னி சிறகுகள் முதல் பார்வையை கமல் அவர்கள் வெளியிடும் போது எடுத்த படமாகும் .

அக்னி சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் நவீன் . இந்த படத்தை தயாரித்து வருகிறார் அம்மா கிரியேஷன்சின் டி.சிவா .படத்தில் விஜய் ஆன்டனி, அருண் விஜய் ,அக்ஷரா ஹாசன்,பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசையமைத்து வருகிறார் நடராஜன் சங்கரன் .படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் கே.ஏ.பாட்ஜா .

Agni siragugal team wishes kamalhassan

தற்போது படத்தின் இரண்டாம் ஷெடியூல் ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் நடந்து வருகிறது. படத்தின் முதல் ஷெடியூல் சில மாதங்களுக்கு முன்பே கொல்கத்தாவில் நடை பெற்றது.அதை தொடரந்து ஐரோப் பறந்திருக்கும் படக்குளு . தற்போது ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது . ரஷ்யாவின் 'கொசாக் பிலிம் ஸ்டூடியோவில்' தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அக்னி சிறகுகள் படத்தில் பல ஐரோப்பிய கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அக்னி சிறகுகள் படம் போல இருக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பின் போது இங்கிருந்து மிக முக்கியமான சிலரையே படக்குழுவினர் அழைத்து செல்வது வழக்கம் ,அக்னி சிறகுகள் படக்குளுவே 25 பேருக்குள் தான் இரோப் சென்றிருக்கிறார்கள். ஏனெனில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அதிக படியான ஆர்டிஸ்டுகளை வெளிநாடுகள் அழைத்து செல்வது படத்தின் பட்ஜெட்டை பாதிக்கும் .சரியான பட்ஜெட்டில் படம் எடுத்த நவீனுக்கு இது நன்றாகவே தெரியும்.

மறுமுனையில் தயாரிப்பாளர் டி.சிவா அதிக படியான கமர்சியல் படங்களையே தயாரித்தவர் . இந்த படம் கமர்சியல் மாஸ் என்டர்டெயினராக வரப்போகிறதா அல்லது நவீன் ஸ்டைலில் வரப்போகிறதா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X