twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சசிகுமார் பட டைட்டிலுக்கு ஏற்பட்ட சிக்கல்... என்ன செய்யப் போறாரு காமன்மேன்?

    |

    சென்னை : நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு காமன்மேன் என்று அறிவிக்கப்பட்டு டீசரும் சமீபத்தில் வெளியானது.

    இந்த தலைப்பிற்கு ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உரிமை கோரி சென்சார் போர்டிடம் முறையீடு செய்தது.

     3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்! 3 நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயனின் பே பாடல்!

    சுசீந்திரன் உதவியாளர் பெயரில் இந்த தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சசிக்குமாரின் காமன் மேன் படம்

    சசிக்குமாரின் காமன் மேன் படம்


    நடிகர் சசிக்குமார் நடிக்கவுள்ள படம் காமன்மேன். இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்க முடிவு செய்து காமன்மேன் என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் முறையீடு

    ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் முறையீடு

    படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இந்தத் தலைப்பின் உரிமை தங்களிடம் உள்ளதாக ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்றநிறுவனம் தென்னிந்திய திரைப்ட வர்த்தக சபையிடம் முறையீடு செய்தது.

    2018ல் தலைப்பு பதிவு

    2018ல் தலைப்பு பதிவு

    டைரக்டர் சுசீந்திரனின் இணை இயக்குநர் விஜய் ஆனந்த் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில் இவர் சார்பில் கடந்த 2018ல் காமன் மேன் என்ற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தலைப்பிற்கான உரிமை தங்களிடம் உள்ளதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

     காமன் மேன் டீசர் வெளியீடு

    காமன் மேன் டீசர் வெளியீடு

    இது தொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் சேம்பர் கேட்டிருந்த நிலையில் பதில் வர தாமதமாகவே செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சசிக்குமார் நாயகனாக நடிக்கும் காமன் மேன் என்ற படத்தின் டீசரை வெளியிட்டது.

    சட்டரீதியான நடவடிக்கை

    சட்டரீதியான நடவடிக்கை

    இதையடுத்து ஏஜிஆர் நிறுவனம் மீண்டும் பிலிம் சேம்பரை அணுகிய நிலையில், அந்த நிறுவனம் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சேம்பர் தெரிவித்தது. இதையடுத்து சென்சார் போர்டிடம் சட்டரீதியான நோட்டியை அந்நிறுவனம் அனுப்பியது.

    ஏஜிஆர் நிறுவனத்திற்கு தலைப்பு

    ஏஜிஆர் நிறுவனத்திற்கு தலைப்பு

    இந்த விவகாரத்தில் தற்போது சென்சார் போர்ட், காமன்மேன் டைட்டிலை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிக்குமாரின் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

    சிக்கலில் சசிக்குமார் பட டைட்டில்

    சிக்கலில் சசிக்குமார் பட டைட்டில்

    இந்த விவகாரத்தில் தொடர்ந்து சசிக்குமார் படத்தின் டைட்டில் மாற்றப்படுமா அல்லது மீண்டும் காமன் மேன் படத்தின் டைட்டிலுக்காக முட்டி மோதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் வெளியான சசிக்குமாரின் காமன் மேன் படத்தின் டீசர் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்களும் அந்த டைட்டிலில் பிக்ஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AGR right films got the title rights of comman man
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X