தியேட்டரில் காத்துவாங்குதா ‘பராசக்தி‘.. ஆஃபரை அறிவிக்கும் தியேட்டர்கள்.. என்னடா இப்படி ஆகிபோச்சு!
சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான 'பராசக்தி' திரைப்படம் உலகளவில் 27 கோடிக்கும் வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், தியேட்டர்களில் முன்பதிவு மந்தமாக இருப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா, சேத்தன், பைசல் ஜோசப் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதையடுத்து, இப்படம் முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீண்ட கால விடுமுறை இருப்பதால் வசூல் பாதிக்கப்படலாம் என கருதி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் ஜனவரி 10ம் தேதிக்கு மாற்றியது.

பராசக்தி: இதையடுத்து, பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு, பின் 25 கட்டுகளுடன் படம் நேற்றுமுன் தினம் வெளியானது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படத்தில் மத்திய அரசை விமர்சித்தும், இந்தி மொழிக்கு எதிராக இருந்த வசனங்கள் மியூட் போட்டது தணிக்கை வாரியம். இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.27க்கு மேல் என அறிவித்துள்ளது.
தியேட்டரில் காத்துவாங்குதா?: இந்நிலையில் பராசக்தி படத்தை பார்க்க பெரிய அளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். அது உண்மை என்பது போல, படத்தை எப்படியாவது பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக AGS cinema கடலூர் மக்களுக்கு புதிய ஆபரை கொடுத்துள்ளது. அதாவது, ரூ 50 ரூபாய் ஸ்நாக்ஸ் ஆபரை கொடுத்துள்ளது. அதே போல, தஞ்சாவூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் அணிந்து வந்த பலருக்கு, காவல்துறையினர் 'பராசக்தி' படத்திற்கான இலவச சினிமா டிக்கெட்டுகளையும் பரிசாக வழங்கினர். இந்த செய்தி இணையத்தில் டிரெண்டாக நிலையில் இணைவாசிகள், பராசக்தி தியேட்டரில் காத்துவாங்குதா, இத்தனை ஆஃபரை எதற்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











