ஏஜிஎஸ் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தும் ஹீரோ!

சென்னை : பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது.

திருட்டுப்பயலே தொடங்கி கடைசியாக பிகில் வரை எண்ணற்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவை அறிமுகம் செய்கிறது.

திருட்டுப்பயலே

திருட்டுப்பயலே

பிரம்மாண்ட திரையரங்குகளுக்கு பெயர்போன ஏஜிஎஸ் நிறுவனம் பட தயாரிப்பிலும் வெற்றிகரமாக கால் தடத்தை பதித்து வைக்கிறது அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன் ஹீரோவாக நடித்த திருட்டுப்பயலே என்ற படத்தை தயாரித்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது முதல் படமே மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

விஜய் அட்லி கூட்டணியில்

விஜய் அட்லி கூட்டணியில்

இதைத்தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம்,மாசிலாமணி, மதராசபட்டினம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, எங்கேயும் காதல், யுத்தம் செய், கவண், மாற்றான், இரும்புத்திரை, அனேகன், தனி ஒருவன், திருட்டுப்பயலே 2, மற்றும் விஜய் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான பிகில் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிகளை கண்டு வருகிறது.

கதாநாயகியே இல்லாமல்

கதாநாயகியே இல்லாமல்

இப்பொழுது வைகைப்புயல் வடிவேலு தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நாய் சேகர் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். கதாநாயகியே இல்லாமல் முற்றிலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹீரோவாக அறிமுகம் செய்கிறது

ஹீரோவாக அறிமுகம் செய்கிறது

இதுவரை பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த ஏஜிஎஸ் நிறுவனம் முதல் முறையாக ஹீரோவை அறிமுகம் செய்கிறது. கோமாளி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதுடன் அப்படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக அறிமுகம் செய்கிறது . ஏஜிஎஸ் நிறுவனம் ஹீரோவை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

பிரதீப் ரங்கநாதன் இதற்க்கு முன்னாள் ஹீரோவாக பல குறும்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . கமல் எனும் இயக்குனருடன் கூட்டு சேர்ந்து ஹைவே காதலி என்னும் படத்தில் நடித்தது யூட்யூபில் இன்று வரை நிறைய பேர் பார்த்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X