விஜய் 63… அட்லிக்கு இத்தனை நிபந்தனைகள்!

விஜய்யின் 63வது திரைப்படத்தை இயக்கும் அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

Recommended Video

விஜய் 63…அட்லிக்கு இத்தனை நிபந்தனைகள்!- வீடியோ

சென்னை: விஜய்யின் 63வது திரைப்படத்தை இயக்கும் அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

நடிகர் விஜய்யின் 63வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். ஏற்கனவே அட்லி தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கி வெற்றியைக் கொடுத்தவர் என்பதால் விஜய் அட்லி இயக்கத்தில் மீண்டும் இணைகிறார்.

 AGS conditions for Atlee in Vijay 63 movie!

இந்த நிலையில் அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் சில கட்டளைகளை விதித்துள்ளது. படம் தொடர்பான வேலைகளை உதவி இயக்குனர்களுடன் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திலேயே செய்ய வேண்டும். அதற்கு மாறாக தனி அலுவலகம் கேட்டால் அதற்கு ஆகும் செலவுகளை அட்லியே பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

மேலும் திரைப்படத்திற்கு ஆகவேண்டிய செலவு முழுவதையும் முன்கூட்டியே அக்ரிமென்ட் போட்டு அட்லியிடம் கையெழுத்து வாங்கி உள்ளனராம். திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவானால் அட்லியின் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்வோம் என தயாரிப்பாளர் தரப்பு கறாராக சொல்லியுள்ளனர். இத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளார் அட்லி.

மெர்சல் திரைப்படத்தில் பெரிய தொகை கொடுத்து நடிகர் வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் பிசியாக இருந்த அவர், மெர்சல் திரைப்படத்திற்காக நாற்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். ஆனால் அவரை முழுமையாக படத்தில் பயன்படுத்தவில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் வருத்தமடைந்துள்ளது.

அதிக சம்பளம் கொடுத்து நடிகர்களை ஒப்பந்தம் செய்தபிறகு அவர்களை சரியாக பயன்படுத்துவது இல்லை என அட்லி மீது புகார் எழுந்ததையடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் இவ்வாறு நிபந்தனைகள் விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X