இளையராஜா பயோபிக் ட்ராப்பா? படத்தில் நடந்த அதிரடி மாற்றம் என்ன?

சென்னை: இளையராஜா தனது இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இவரின் இசையை கேட்டு உருகாத மனமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இளசு முதல் பெரிசு வரை ஒவ்வொருவரின் மனதிலும் லாபித்து இருக்கும் இசைஞானியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருப்பதாக கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்றும் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ செய்தி இணையத்தில் பரவியது. இதையடுத்து இப்படம் டிராப்பாகி விட்டதாக செய்தி பரவிய நிலையில், தற்போது இப்படத்தில் அதிரடியான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளையராஜா பயோபிக் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல் எழுதுவதாக கூறப்பட்டது. ஆனால், அரசியல், சினிமா என பிசியாக இருக்கும் கமலால் நேரம் ஒதுக்கி இளையராஜாவின் கதையை கேட்க முடியவில்லை. இதனால் அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷூம் தன்னிடம் வரிசையாக பல படங்கள் இருப்பதால், கால் சீட்டு இல்லை என்று கழண்டு கொண்டார் என்று இணையத்தில் செய்தி வெளியானது.

ilayaraja biopic dhanush

இளையராஜா பயோபிக்: இதுமட்டுமில்லாமல், இந்த படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெர்குரி மூவீஸ் தயாரிக்கும் என அறிவித்து இருந்தது. ஆனால், இளையராஜா அவர்கள் தனக்கும் படத்தில் ஒரு பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ் தனது கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டுத்தான், இப்படத்தில் நடிப்பதாக கூறி இருக்கிறார். இதனால், படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஆறு மாதத்திற்கு மேலாகும் என்பதால் கனெக்ட் மீடியாவும் பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

அதிரடி மாற்றம்: இப்படி படத்தை தயாரிக்க யாரும் முன்வராததால், நேரடியாக டெல்லிக்கே சென்று சில தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி உள்ளார். ஆனால், அதுவும் சரிப்பட்டு வராததால் படம் கைவிடப்பட்டுள்ளதாக கடந்த சில மாதத்திற்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால், அதன் பின் இளையராஜா பயோபிக் பற்றி எந்த தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது படத்தில் அதிரடியான மாற்றம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, இப்படத்தை கன்னெக்ட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது. இளையராஜாவின் பயோபிக்கின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அது டிராப்பாகிவிட்டது என்று பரவிய தகவலால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது வந்து இருக்கும் அப்டேட்டடால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கைவசம் உள்ள படம்: தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து படம் பிப்ரவரி 21ந் தேதி வெளியாக உள்ளது. இந்தபடத்தை தெடர்ந்து குபேரன் என்ற பான் இந்திய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X