Dragon First Look: கோட் ஃபீவர் எல்லாம் ஓவர்.. ட்ராகன் ஃபர்ஸ்ட் லுக்கை இறக்கிய ஏ.ஜி.எஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.ஜி.எஸ். இந்த நிறுவனத்தின் பேனரில் ஒரு படம் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகின்றது. இந்நிலையில் இவர்களது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் விஜய் நடித்திருந்த கோட். இந்தப் படம் உலகம் முழுவது ரூபாய் 455 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இதுமட்டும் இல்லாமல் ஓடிடி பிசினஸ், படத்தின் பாடல்கள் விற்றது என படத்தின் மொத்த வசூல் என்பது இதைவிடவும் இன்னும் அதிகம். இப்படியான நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் டிராகன். இந்தப் படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார். இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து வருகின்றார். படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனை வைத்து, ஏற்கனவே லவ் டுடே என்ற படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் அந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் இவானா, சத்யராஜ் ராதிகா, ரவீனா ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற மாமா குட்டி பாடல் இப்போதுவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்களில் ஒன்றாக உள்ளது. மேலும், படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தியேட்டரில் வசூல் மழை பொழிந்தது. படம் தியேட்டரில் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் படத்தின் மொத்த பட்ஜெட்டே மிகவும் குறைவுதான் எனவும், ஆனால் படம் செம ஹிட் ஆகி தயாரிப்பு நிறுவனத்திற்கு மாபெரும் லாபத்தை ஈட்டித்தந்துள்ளது.
கோட் வசூல்: அதேபோல் அண்மையில் வெளியான கோட் படமும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. குறிப்பாக படத்த்தின் மொத்தம் பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள். இதில் அனைத்து நடிகர்களின் சம்பளமும் அடக்கம். விஜய்க்கு ரூபாய் 200 கோடிகள் சம்பளம் கொடுத்ததாக தயாரிப்பாளர் அர்ச்சனாவே தெரிவித்தார். இந்நிலையில் படம் தமிழ்நாட்டில் தியேட்டரில் மட்டும் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 455 கோடிகளை வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக மாறியது.
டிராகன் ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் டிராகன். இந்தப் படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்குகின்றார். இதுமட்டும் இல்லாமல் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து வருகின்றார். படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகின்றது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ் லுக் போஸ்டரில் கல்லூரி வாகனத்தின் மேல் பிரதீப் ரங்கநாதன் அமர்ந்து கொண்டு சிக்ரெட் பிடித்துக்கொண்டு உள்ளார். இதுமட்டும் இல்லாமல் அந்த கல்லூரிப் பேருந்தில் வொர்ஸ்ட் ஸ்டூடண்ட் எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











