Actor Vijay: விஜய்யுடன் சேர்ந்து பைக்கில் பறக்கலாம்.. ஏஜிஎஸ் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மாஸான அனுபவத்தை கொடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா என 4 மணி ஷோவில் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

விஜய் படம் என்றாலே திருவிழா கொண்டாட்டமாகத்தான் இருக்கும். கோட் படத்திற்கும் அதே கொண்டாட்டத்தில்தான் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கேரளா, கர்நாடகாவிற்கு சென்று ரசிகர்கள் படத்தை என்ஜாய் செய்து படத்தின் அதிரடி சரவெடி குறித்து அடுத்தடுத்து ரிவ்யூ செய்து வருகின்றனர்.

vijay goat movie ags entertainment

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்துடன் தளபதி 69 படத்திலும் நடிக்கவுள்ள விஜய், நடிப்பிலிருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், கோட் படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகச்சிறப்பான கேரக்டரில் விஜய் நடித்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் பிளாஸ்டாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

க்ளைமாக்ஸ் காட்சி: குறிப்பாக படத்தின் கடைசி 40 நிமிட காட்சிகள் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளதாகவும் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்குமாறும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். படத்தின் திரைக்கதையில் வெங்கட் பிரபு புகுந்து விளையாடியுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் சேர்த்து பார்க்கும்போது யுவனின் இசை பின்னி பெடலெடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் அதிரடி சரவெடியாக படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

vijay goat movie ags entertainment

சர்ப்பிரைசான இன்ட்ரோ காட்சிகள்: தளபதியின் இன்ட்ரோ காட்சிகள் மிகப்பெரிய சர்ப்பிரைசாகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கேரளாவில் கோட் படத்தை பார்த்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்தனர். படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் மட்டுமில்லாமல் மூன்றாவதாக ஒரு கேரக்டரிலும் விஜய் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக அப்பா மற்றும் மகன் விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய மாஸ் காட்டியது. குறிப்பாக அப்பா -மகன் விஜய் பைக்கில் போவது போன்ற காட்சிகளுடன் வெளியான போஸ்டர் ரசிகர்களை கொண்டாட செய்தது.

விஜய்யுடன் பறக்கலாம்: இந்நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும்வகையில் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஜிஎஸ் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. நடிகர் விஜய்யுடன் பைக்கில் அமர்ந்திருப்பது போல எடிட் செய்து தரும் ஏஐ இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. agsentertainment.yareweare.com இணையதளத்தில் ரசிகர்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றி, விஜய்யுடன் இருப்பது போல புகைப்படத்தை உருவாக்க முடியும். இதனிடையே ஏராளமான ரசிகர்கள் இந்த புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு ப்ளூ சட்டை மாறனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X