Shankar: ஷங்கரின் பிடிவாதத்தால் டிராப் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் படம்.. இவ்வளவு ஈகோ ஆகாது!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஒரே இயக்குநர் என்றால் அது ஷங்கர் மட்டும் தான். இவரது படங்களில் பாடல்களோ அல்லது ஏதாவது சில காட்சிகளோ மிகவும் பிரமாண்டமான முறையில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். இதனாலே, இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் இவரது இயக்கத்தில் வெளியாகிய கடைசி இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படு தோல்விப் படமாக அமைந்ததுடன், படத்தில் பல காட்சிகள் அபத்தமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இப்படியான நிலையில் பத்திரிகையாளர் அந்தணன், ஷங்கர் குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

rajinikanth shankar andhanan

காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், தான் சினிமாவில் அறிமுகமான ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு வரை தோல்வியே சந்திக்காத இயக்குநராக வலம் வந்தார். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா, கஸ்தூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் இந்தியன். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து கடந்த ஆண்டு ரிலீஸ் செய்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் படுதோல்வியை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சந்தித்தது. இவரது சினிமா வாழ்க்கையில் அவர் படுதோல்வியை முதன் முறையாக சந்தித்தது, இந்தப் படத்தின் மூலம்தான்.

rajinikanth shankar andhanan

தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படமும் கிட்டத்தட்ட தோல்விப்படம்தான் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், இவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியது தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், ஷங்கருக்கு இந்த அளவுக்கு ஈகோ ஆகாது எனவும் கூறி வருகின்றனர்.

rajinikanth shankar andhanan

எந்திரன்: அதாவது அந்த வீடியோவில் அந்தணன் பேசுவது, " முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் 2.0 படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனமும், ஷங்கரும் அமர்ந்து பேசி படத்தின் பட்ஜெட்டினை முடிவு செய்துள்ளார்கள். எல்லாமே முடிவான பின்னர் படத்தின் பூஜையை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. இது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறப்பட்டதும் அவர், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வருவதாகக் கூறிவிட்டார்.

rajinikanth shankar andhanan

மறுப்பு: ஆனால் ஷங்கர் வரமாட்டேன் என மறுத்துவிட்டார். மேலும், நான் எப்படி அங்கு வருவேன். நீங்கள் தான் என்னுடைய அலுவலத்திற்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளார். எவ்வளவோ பேசிப்பார்த்தும் ஷங்கர் தனது முடிவில் இருந்து மாறாததால், ஏ.ஜி.எஸ் நிறுவனம், படத்தை தயாரிப்பதில் இருந்து வெளியேறியது.

rajinikanth shankar andhanan

அதன் பின்னர்தான் எந்திரன் 2.0 படத்தினை லைகா நிறுவனம் தயாரித்தது" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ஷங்கருக்கு இவ்வளவு ஈகோவா என கேள்வி எழுப்பி வருவதுடன், இவ்வளவு ஈகோ ஆகாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

rajinikanth shankar andhanan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X