Leo - லியோ திரையரங்க உரிமை.. முடியாத பஞ்சாயத்து

சென்னை: Leo (லியோ) லியோ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பெறுவதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் கடும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸும் உணர்த்தியது.

AGS Try to get Leo movies tamilnadu Theatrical rights

ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. 2000 டான்ஸ்கர்கள் பங்கேற்ற பாடல் காட்சி சமீபத்தில்தான் முடிவடைந்தது.

காஷ்மீரில் லியோ: இதற்கிடையே காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தபோது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ வழக்கமாக இல்லாமல் படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை மையப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், லியோ படக்குழுவுக்கும் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் ஹைனா விலங்குடன் விஜய் காட்சியளித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் முதல் சிங்கிளும் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதே பாடலுக்கு பஞ்சாயத்தும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

திரையரங்க உரிமை: இந்நிலையில் லியோ படத்தின் திரையரங்கத்தில் வெளியிடுவதற்கான உரிமை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதற்கு விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும்; ஆனால் லலித் சொல்லும் தொகைக்கும், ஏஜிஎஸ் கேட்கும் தொகைக்கும் 20 கோடி ரூபாய் இழுபறியில் இருப்பதால் இன்னும் அது முடியவில்லை என கூறப்படுகிறது.

சண்டைக் காட்சிக்காக இவ்வளவா?: இதற்கிடையே படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவருகிறது. இதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்றும் கூறப்படுகிறது. இதில் பிரமாண்ட சண்டைக்காட்சியை லோகேஷ் படமாக்கிவருவதாகவும் அதற்காக மட்டும் பத்து கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X