அதர்வா படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது!

சென்னை : குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு திரைப்படமான நின்னுக்கோரி ரீமேக்கில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தள்ளிப்போகாதே என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுபமா பரமேஸ்வரன் இதில் கதாநாயகியாக நடிக்க தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கும் தள்ளிப்போகாதே சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது.

நின்னுக்கோரி

நின்னுக்கோரி

தொடர்ந்து இளம் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் இயக்குனர் ஆர் கண்ணன் தான் இயக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களை தனது சொந்த தயாரிப்பிலேயே தயாரித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்த நின்னுக்கோரி இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து அதில் வெற்றியும் கண்ட இயக்குனர் கண்ணன் இந்த முறை நின்னுக்கோரி திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். கொடி திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக தமிழில் நடிக்காத அனுபமா பரமேஸ்வரன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கொரானா தொற்று

கொரானா தொற்று

ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம் என ஆக்ஷன் படங்களில் வந்து நடித்து வரும் அதர்வா மீண்டும் 100 பட இயக்குனர் சாம் ஆண்டன் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் சமயத்தில் கொரானா தொற்று ஏற்பட்டு தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்சார் வேலைகள்

சென்சார் வேலைகள்

காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகியிருக்கும் தள்ளிப்போகாதே படத்தின் சென்சார் வேலைகள் முற்றிலும் முடிவடைந்து. அதன்படி யு/ஏ சான்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் இந்த சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரானா பரவல் காரணமாக இதன் வெளியீட்டு தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: atharva அதர்வா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X