விஜய், கமல், சமந்தாவை எல்லாம் AI என்ன பண்ணி வச்சிருக்குன்னு பாருங்க.. விட்டா படமே எடுத்துடும் போல!
சென்னை: AI தொழில்நுட்பத்தின் ஆபத்தை உணர்ந்து டாம் க்ரூஸ் அதனை வில்லனாகவே மாற்றி மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகத்தை எடுத்துள்ளார். ஆனால், இன்னொரு பக்கம் ஏஐ அட்டகாசங்களை காமெடியாக ரசிகர்கள் பார்த்து கடந்து போகின்றனர்.
ஒரு படத்தின் போஸ்டரை போலவே இன்னொரு போஸ்டர் இருக்கிறது என்று மீள் உருவாக்கம் செய்யப்படும் தமிழ் சினிமா போஸ்டர்களையே ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள் அதே போன்ற காப்பி கேட் வேலையை ஏஐ செய்து வருவதை பார்த்து ரசித்து அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏஐ திரைக்கதை எழுதக் கூடாது என ஹாலிவுட்டில் பெரும் போராட்டமே வெடித்து இருக்கிறது. ஆனால், இங்கே தமன்னா ஆடிய காவாலா பாடலை சிம்ரன், நயன்தாரா, காஜல், கியாரா அத்வானி, சமந்தா ஆடுவது போல ஏஐ மாற்றி உள்ளது. அதன் அடுத்த அட்டகாசமாக தற்போது கமல், விஜய், சமந்தாவை எல்லாம் வைக்கிங்ஸ் வெப்சீரிஸில் நடித்தால் எப்படி இருக்கும் என்கிற அனுமான போட்டோ எடிட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

கமல், விஜய், சமந்தா: ஹாலிவுட் நடிகர்களை இந்திய சாமியார்களாக மாற்றி வந்த ஏஐ, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், சமந்தாவை எல்லாம் வைக்கிங்ஸ் வெப்சீரிஸில் வரும் முன்னணி நடிகர்களாக உருமாற்றி வெளியிட்டுள்ள போட்டோ செம டிரெண்டாகி வருகிறது.
ஃபேன் மேட் போஸ்டர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தத்ரூபமாக ஏஐ போட்டோ எடிட்டிங் சேட்டைகள் வெளியாகி வரும் நிலையில், இது வரமா? சாபமா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. போட்டோக்களை உருவாக்க ஆரம்பித்த ஏஐ சினிமாவையே இப்படி எடிட்டிங் வைத்து உருவாக்கி விட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வியும் எழுகிறது.
ஆபத்தா ஆச்சர்யமா: ஆரம்பத்தில் வெள்ளைக்காரங்க இந்தியாவுக்கு வரும் போது எப்படி நம்ம ராஜாக்கள் வாய் பிளந்து அவர்களை வரவேற்று பின்னர் நாட்டை இழந்து அடிமையானார்களோ அதே போன்ற ஆபத்து தான் ஏஐ தொழில்நுட்பத்திலும் உள்ளது என்கின்றனர்.
ஒரு ஓவியரின் கற்பனை படைப்பு உருவாக பல ஆண்டுகள் கூட ஆகும். ஆனால், அதை எல்லாம் ஏஐ தொழில்நுட்பம் நொடிப் பொழுதில் செய்து வருகிறது. ஏகப்பட்ட டெக்னாலஜி நிறுவனங்கள் ஆட்களை வேலையில் இருந்து தூக்கி விட்டு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றனர். செய்தி வாசிப்பது, கால் சென்டர் வேலைகள், தட்டச்சு செய்வது, கோடிங் எழுதுவது என பல துறைகளில் ஏஐ கொண்டு வரப்பட்டால் ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்புகளே பறிபோகும் நிலை உருவாகி விடும் என்கின்றனர். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதும் நிதர்சனமான உண்மையாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











