Ajith Kumar: அடேங்கப்பா.. ராஜ ராஜ சோழன்னா இப்படி இருக்கணும்.. இணையத்தை அலறவிடும் அஜித் குமார்!
சென்னை: தமிழ் சினிமா நடிகர்களின் ஏஐ புகைப்படங்கள் தான் தற்போது அதிகளவில் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகின்றனரோ அந்த அளவுக்கு ஏஐ மேஜிக் மூலம் செய்து அங்கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் அஜித் விஷ்ணுவர்தன் உடன் இணைந்து ராஜ ராஜ சோழன் படத்தை பண்ண திட்டமிட்டு இருந்ததாக ஒரு தகவல் உலாவி வரும் நிலையில், ராஜ ராஜ சோழனாகவே நடிகர் அஜித்தை ஏஐ மூலம் மாற்றிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

ராஜா கெட்டப்பில் அஜித் சும்மா தாறுமாறாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு படத்தில் மட்டும் அஜித் நடித்தால் படம் பூஜை அன்னைக்கே எல்லா ஏரியாவிலும் பிசினஸ் ஆகிடும் என எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.
ராஜ ராஜ சோழனாக அஜித்: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாக நடித்திருப்பார். ஆனால், சிவாஜி நடித்த ராஜ ராஜ சோழன் படத்தில் இருந்த அந்த கம்பீரம் அவரிடம் இல்லாமல், எளிமையான மன்னனாகவே தோன்றிருப்பார்.
ரசிகர்களையும் அந்த கெட்டப் பெரிதாக ஈர்க்கவே இல்லை. இந்நிலையில், அஜித்தை ராஜ ராஜ சோழனாக இப்படி பார்த்த ரசிகர்கள் ராஜ ராஜ சோழன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயில் எனும் பேரதிசயம்: தஞ்சை பெரிய கோயிலில் அந்த காலத்தில் ராஜ ராஜ சோழன் எப்படி கட்டினார் என்பது இன்னுமே பலருக்கு புரியாத புதிராகவும் பேரதிசயமுமாகவே உள்ளது. அப்படியொரு கலை நயத்துடன் யாரும் யோசித்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு கட்டடக் கலையை கொண்டு பெருவுடையார் கோயிலை ராஜ ராஜ சோழன் எப்படி கட்டியிருப்பார் என்கிற கற்பனையுடன் உருவாகும் கதையில் அஜித் நடிக்க விரும்பியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க வேண்டிய அந்த படம் சில பல காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அதை கையில் எடுக்க அஜித் யோசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
ஏஐ மாயாபஜார்: ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ரேஞ்சுக்கு எந்தவொரு சிஜி செலவும் இல்லாமல் இப்படி ஏஐ தொழில் நுட்பத்தில் ராஜ ராஜ சோழன் கெட்டப்பில் அஜித் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், இதே போன்ற கெட்டப்பில் அஜித் ஒரு ராஜா காலத்து படத்தில் நடித்தால் கூட பாகுபலி எல்லாம் காணாமல் போய்விடும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











