நைட் பீச்ல செம அவுட்டிங்.. கோலிவுட் ஸ்டார்ஸ்லாம் ஜாலியா இருக்காங்க.. கலக்கும் AI வீடியோ

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோலிவுட் பிரபலங்களை வைத்து உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. ரசிகர்கள் அனைவருமே அதனை அதிகம் பகிர்ந்துவந்தனர். இந்நிலையில் அதே ஸ்டார்களை வைத்து தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் ஏஐ வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன.

தமிழ் திரையுலகின் டாப் ஸ்டார்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதே பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது. ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்து 30 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அதேபோல் விஜய்யும் அஜித்தும் ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல்தான் விக்ரமும், சூர்யாவும் பிதாமகனுக்கு பிறகு நடிக்கவில்லை.

ரசிகர்களின் ஆசை: தனிப்பட்ட நடிகருக்கு பலர் ரசிகர்களாக இருந்தாலும்; கோலிவுட்டின் டாப் ஸ்டார்கள் அனைவரையும் ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் கதை, வியாபாரம் உள்ளிட்டவைகளால் அது நடக்காமல் இருக்கிறது. சரி திரைப்படத்தில்தான் பார்க்க முடியவில்லை விழாவிலாவது எல்லோரையும் ஒன்றாக பார்த்துவிடலாம் என்று ஏங்குகிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதுவும் எப்போதாவதுதான் சாத்தியப்படுகிறது.

AI-Generated Videos of Kollywood top Stars in Beach Go Viral on Social Media
Photo Credit:

ஏஐ தொழில்நுட்பம்: இப்படிப்பட்ட சூழலை ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து சாத்தியப்படுத்திவருகிறார்கள் ரசிகர்கள். சில நாட்களுக்கு முன்பு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் எல்லாம் ஒன்றாக டீ கடைக்கு சென்று டீ குடிப்பது போன்ற புகைப்படத்தை ரசிகர் உருவாக்க; அது சோஷியல் மீடியாவில் காட்டு தீயாக பற்றிக்கொண்டது.

இசையமைப்பாளர்களும்: நடிகர்கள் மட்டுமின்றி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரும் ஒன்றாக டீ கடையில் அமர்ந்து அரட்டை அடிப்பது போன்ற ஃபோட்டோவையும் உருவாக்கினார்கள். இவை இரண்டும் அனைவரிடமும் பலமான வரவேற்பை பெற்றது. இவை அனைத்துமே ஏஐயால்தான் சாத்தியப்பட்டது. அந்தத் தொழில்நுட்பத்தால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் இது போன்ற விஷயத்தால் அதை ரசிக்கவே செய்யலாம் என்பது பலரது கருத்து.

கலக்கும் வீடியோ: இந்நிலையில் கோலிவுட் ஸ்டார்கள் ஒன்றாக இருக்கும்படி புகைப்படங்கள் உருவாக்கப்பட்ட சூழலில் இப்போது வீடியோ ஒன்றும் ரவுண்டிங்கில் இருக்கிறது. அதாவது அத்தனை டாப் நடிகர்களும் இரவு நேரத்தில் சென்னையில் ஒன்றாக வீதியுலா போவது போன்றும், கடற்கரையில் அமர்ந்து கதை பேசுவது, காலாற நடந்து செல்வது போன்ற வீடியோவை உருவாக்கியிருக்கிறார் ரசிகர் ஒருவர். ஃபோட்டோக்கள் பெற்ற சூப்பர் ரெஸ்பான்ஸ் போன்றே வீடியோவும் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது. மேலும் இதனை ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X