CWC : முதலமைச்சர் ஸ்டாலினுடன் விஜய்.. என்ன செய்யறாருனு பாருங்க.. இந்த AI போட்டோஸ் நல்லா இருக்கேப்பா!
சென்னை: AI வந்த பின்னர் பல வேலைகள் நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடுகிறது. அது நமது நேரத்தை பல வழிகளில் மிச்சம் செய்து கொடுக்கிறது. இப்படி இருக்கும்போது, AI பயன்பாடு அனைவரிடத்திலும் அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அனைவரிடத்திலும் வந்த பின்னர் இதை வைத்து பல ஜாலியான வேலைகளை இணையவாசிகள் செய்து வருகிறார்கள். அதுவும் சினிமா ரசிகர்கள், தங்களது கற்பனையில் யாரெல்லாம் ஒரே ஃபிரேமில் வேண்டுமோ, அவர்கள் அனைவரையும் ஒரே ஃபிரேமுக்குள் கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் கோலிவுட் நடிகர்கள் தொடங்கி நடிகைகள் என பலரையும் சில அழகான தீம்களின் AI மூலம் படங்களை உருவாக்கி பகிர்ந்து வந்தார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக நடிகர்கள் அனைவரும் இணைந்து டீ கடைக்குச் சென்று டீ சாப்பிடுவது போலவும், நடிகைகள் அனைவரும் சேர்ந்து, விளையாடுவது போலவும் AI படங்களை உருவாக்கி பகிர்ந்து வந்தார்கள். அதிலும் சில புகைப்படங்கள் எல்லாம், நமது அபிமான நடிகைகளை எவ்வளவு அழகாக இந்த AI காட்டுகிறதே என்றும் பலரும் வியந்து பார்த்தார்கள்.

ஏ.ஐ: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துவிட்டதால், லியோ படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டால் அதில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற கோணத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது. அந்த வகையில் நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செட் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட AI புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர்கள் - அரசியல் தலைவர்கள்: அதாவது இந்த கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட புகைப்படத்தில், நடிகர்கள் விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி என அரசியல் தலைவர்களும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











