லுங்கி, டவுசரோட கோலிவுட் ஸ்டார்ஸ்லாம் ஒன்னா எங்கே போறாங்க?.. கலக்கும் AI புகைப்படங்கள்.. வேற லெவல் போங்க

சென்னை: தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இக்காலகட்டத்தில் அனைத்தும் சாத்தியமே என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவில் ஏஐ வளர்ந்ததை அடுத்து மக்களே தங்களுக்கு தேவையான அனைத்தையும் அதனை பயன்படுத்தி செய்து பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கோலிவுட்டை சேர்ந்த டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து டீ குடிக்க சென்றால் எப்படி இருக்கும் என்ற ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

உலகத்தில் கடந்த பத்து வருடங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதனை பயன்படுத்தி இல்லாததை இருக்கும்படியும் காட்டலாம்; இருப்பதை இல்லாதது போன்றும் காட்டலாம். அதிலும் ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு சாத்தியப்படாததை எல்லாம் கற்பனையாக சாத்தியப்படுத்தி திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் மக்கள். அனைவரது மொபைலிலுமே இப்போது பெரும்பாலும் ஏதேனும் ஒரு ஏஐ டூல் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுவது குறிப்பிடத்தக்கது.

வந்த பிரச்னைகள்: இந்த ஏஐ வளர்ச்சியை வைத்து குரங்கைக்கூட பேச வைத்து முகநூலில் ஒரு Vlog பேஜே ரன் ஆகிக்கொண்டிருக்கிறது. தனக்கு தேவையான ஒரு உலகத்தையேகூட ஏஐயில் கற்பனையாக உருவாக்கிக்கொள்ள முடியும். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கினாலும் அதனால் பிரச்னைகளும் வரத்தான் செய்கின்றன. முக்கியமாக டீப் ஃபேக் வீடியோவால் ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நடிகைகள் பாதிக்கப்படவும் செய்திருக்கிறார்கள்.

AI photos of Rajinikanth Kamal Vijay amp amp top Kollywood stars at a tea shop go viral
Photo Credit:

சத்தமாக எழும் குரல்கள்: ராஷ்மிகா மந்தனா ஓவர் கவர்ச்சியாக ஆடை அணிந்தது போன்ற வீடியோ, பிரியங்கா மோகன் தொடர்பான கவர்ச்சி புகைப்படங்கள் என்று இஷ்டத்துக்கு அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஃபோட்டோக்களை ஒரு தரப்பினர் உருவாக்கியது பெரும் பரபரப்பை இணையத்தில் கிளப்பின. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களும் தங்களது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

AI photos of Rajinikanth Kamal Vijay amp amp top Kollywood stars at a tea shop go viral
Photo Credit:

கீர்த்தி சுரேஷும்: இவர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஃபேமஸாக இருக்கும் கீர்த்தி சுரேஷும்கூட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'ஏஐ வந்து ரொம்பவே பயமுறுத்துகிறது. ஒருமுறை நான் அணியாத ஆடை மற்றும் கொடுக்காத போஸை வைத்து ஒரு புகைப்படத்தை க்ரியேட் செய்திருந்தார்கள். அதனை பார்த்து நானே கொஞ்ச நேரம் குழம்பிவிட்டேன்' என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இந்த ஏஐயின் வருகையால பலருக்கு வேலை போகவும் செய்திருக்கின்றன. இன்னும் பலர் தங்கள் வேலை போய்விடுமோ என்ற அச்சத்துடனேயே வேலை பார்த்தும் வருகிறார்கள். இப்படி சில பிரச்னைகளை அந்தத் தொழில்நுட்பம் உருவாக்கினாலும், சாத்தியமில்லாத சில விஷயங்களை சாத்தியமாக்குவதற்காக அதனை ரசிக்கவும் செய்யலாம்.

இப்போதைய ட்ரெண்டிங்: அந்தவகையில் ஏஐயை வைத்து உருவாக்கப்பட்ட சில புகைப்படங்கள் பயங்கர ட்ரெண்டாகியிருக்கின்றன. அதாவது ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கோலிவுட்டை சேர்ந்த டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தெருமுனை டீ கடையில் டீ குடிப்பது சாத்தியமா?.. அது கண்டிப்பாக சாத்தியமில்லாததுதானே. ஆனால் அவர்கள் எல்லாம் ஜாலியாக பேசிக்கொண்டே நடந்து சென்று சாதாரண டீ கடையில் டீ குடிப்பது போன்று உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X